Saturday, March 10, 2012

இங்கு மூத்திரம் கழிக்காதீர்

ஜோஸ் அன்றாயின்

(இந்த கதையில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் உண்மையல்ல; வெறும் கற்பனையே.)

“நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவுமில்லை.” என்று குற்றவாளி கூண்டில் நிற்கும் பத்மநாபன் உறுதிமொழி எடுத்துக்கொண்டான். அவன் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை அரசு வழக்கறிஞர் சந்தேகத்துடன் பார்ப்பது போல் தோன்ற மீண்டும், “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவுமில்லை.” என்று கூறுகிறான். அதை அவதானித்த நீதிபதி, “எத்தனை தடவை சொன்னாலும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் வாதங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பளிக்கப்படும்.” என்று கூற, “அப்போ... உண்மையின் அடிப்படையில் இல்லியா?” என அதிர்ச்சியுற்ற அவன் திருப்பி கேட்க, நீதிபதி அவனை சட்டை செய்யாமல் அரசு வழக்கறிஞரை பார்த்து “நீங்கள் இப்போது குற்றவாளியை விசாரிக்கலாம்” என்று கூறுகிறார்.

நாட்டில் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட அந்த விசாரணை பற்றிய விபரங்களுக்குள் செல்வதற்கு முன்னால் பத்மநாபன் யார்? எந்த குற்றத்திற்காக அவன் கைது செய்யப்பட்டான்? என்ற விபரங்களை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

திரும்பும் திசையெல்லாம் மேம்பாலங்களும், அகன்ற சாலைகளும், வானத்தை தொடும் கட்டிடங்களும் நிறைந்திருக்கும் நாட்டின் தலைநகரான சிங்காரப்பட்டினத்திற்கு சில வருடங்களுக்கு முன்னால் வேலைத்தேடி வந்தவன் பத்மநாபன். வேலை எப்போதுமே கிடைத்தது. சம்பளம்தான் எப்போதாவது கிடைக்கும். எப்போதாவது தண்ணீர் வரும் அறைக்கு எப்போதாவது வாடகை கொடுத்துக்கொண்டு தங்கியிருந்தான். துரு கொட்டும் சைக்கிள், சாயம் போன வண்ணத் துணி போல் படம் காட்டும் தொலைகாட்சிப் பெட்டி, இரைச்சலை வீசும் மின்விசிறி என்று அடங்கிவிடும் அவன் சொத்து. அடிநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சூழலில் நடக்கும் எதையும் காணா நம் கால மத்தியத்தர வர்க்கத்தின் எருமைமாட்டு கண்களையும் கொண்டவன் அவன். யாருக்கும் எதுவும் செய்யா குணம். ஆனாலும் சில நேரங்களில் சில விசயங்கள் அத்தகையவர்களையும் கூட அதிர செய்துவிடுகின்றன.



ஒருநாள் பத்மநாபன் கம்பெனிக்குப் போகாமல் வெளியே உலாவச் செல்லும் போது மூத்திரம் முட்டிக்கொண்டு வர தோதான இடம் தேடி அலையாய் அலைந்தான். வாகுவான இடம் எங்கும் தென்படாது போக அதற்கு மேலும் அடக்க முடியா நிலையில் அவன் நகரின் பிரதான சாலையிலேயே மூத்திரம் கழிக்க அங்கு அதலப் பாதாளம் போல் மிகப்பெரும் பள்ளம் உண்டாகிவிட்டது. அதிர்ந்து போகிறான். உடனே சுதாரித்துக் கொள்ளவில்லையெனில் அந்தப் பள்ளத்தில் அவனே விழுந்திருப்பான். மேலதிக அதிர்ச்சியாய் சாலையை ஒட்டியிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களும் அவன் போன்றே அங்கு மூத்திரம் கழிக்க சாலையே மறைந்து பெரும் ஆறாக மாறிவிட்டது. இப்படி நடக்குமென்று எதிர்பாராமல் சாலைக்கு மறுபுறம் சென்ற மாணவர்கள் ஆற்றைத் தாண்டமுடியாமல் அழ ஆரம்பித்தனர். கண்கூடாக தான் கண்ட இந்தக் காட்சியின் மூலம் சாலை போடப்பட்டதில் மிகப் பெரும் ஊழல் நடந்திருப்பதை கண்டுபிடித்துவிட்ட பத்மநாபன் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரி நீதிவண்ணனை தண்டிக்க முடிவு செய்தான்.

அந்த நேரத்தில் நகரின் பிரதான மைதானத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நீதிவண்ணன் கலந்து கொள்ளவிருப்பதைக் கேள்விப்படும் பத்மநாபன் அவரை அங்கேயே கொலை செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்தான். அவனுக்கு ஒரு கைத்துப்பாக்கி மட்டுமே தேவையாயிருந்தது. வெளிமார்க்கெட்டில் துப்பாக்கிகள் எளிதில் கிடைப்பதில்லை என்று தெரிந்துகொண்ட அவன் ஆயுத கடத்தல்காரர்களை தொடர்பு கொண்டு விலையை விசாரிக்க ரூபாய் 7500 க்கு குறைவாக எந்த துப்பாக்கியும் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்துகொண்டான். பணத்தை புரட்டுவதற்கான எல்லா வழிகளையும் யோசித்துப் பார்த்தான். சைக்கிளை விற்றால் 600 ரூபாய் கிடைக்கும். தொலைகாட்சிப் பெட்டியை விற்கலாம்தான். ஆனால் அரசு மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக கொடுத்த புது தொலைக்காட்சிப் பெட்டியே 1200 ரூபாய்க்கு கிடைப்பதால் எதிர்பார்த்த பணம் கிடைக்க வாய்ப்பே இல்லை. மின்விசிறியை ஏற்கனவே விற்க முயற்சி செய்து தோல்வியடைந்ததால் அதை கணக்கில் எடுப்பதில் எந்த அர்த்தமுமில்லாதிருந்தது. இதனால் கத்தியைக் கொண்டே அவன் தன்னுடைய வேலையை முடித்தாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டான். கத்தியை வாங்கும் எண்ணத்துடன் கடையொன்றினுள் நுழைந்து கத்தியின் விலையை கேட்க, கடைக்காரர் “கொறஞ்ச வெலைல வேணும்னா 35 ரூபாய்க்கு இத எடுத்துக்கோங்க.” என்றவண்ணம் ஒரு கத்தியை காட்டுகிறார். பள பளவெனக் கூர்மையாக இருந்த அந்தக் கத்தி பத்மநாபனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஆனால் அவனிடம் மொத்தமே 23 ரூபாய்தான் இருந்தது. கத்தியை வாங்கியும் ஆகவேண்டும். இல்லையென்றால் அவனுடைய திட்டத்தைச் செயல்படுத்த முடியாமலே போகும். அவன் கடைக்காரரைப் பார்த்து, “23 ரூபாய்க்கு அந்தக் கத்தியை தர முடியுமா?” என்று கேட்க கடைக்காரர், “ஒரு பைசா குறையாது.” என்கிறார். பத்மநாபன் தளர்ந்துவிடாமல், “இந்த கத்தியை வச்சு நான் செய்யப் போற காரியத்தைக் கேள்விப்படும் போது நீங்க ரொம்ப பெருமை படுவீங்க.” என்று கூறுகிறான். எச்சரிக்கையான கடைக்காரர், “ஒனெக்கெல்லாம் கத்தி கெடையாது. வெளிய போயா மொதல்ல.” என்று துரத்திவிடுகிறான். ஏமாற்றத்துடன் அங்கிருந்து வெளியேறும் பத்மநாபன் ஒரு பெட்டிக்கடையிலிருந்து கில்லெட் ப்ளேடு ஒன்றை வாங்கிக்கொள்கிறான்.

மந்திரி நீதிவண்ணன் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே சென்று தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவான இடத்தில் நின்றுகொண்டான் பத்மநாபன். ஆள்காட்டி, நடு மற்றும் கட்டை விரல்களால் ப்ளேடை லாவகமாக பிடித்துக்கொண்டு குரல்வளையில் அரைவட்டமாக அரை அங்குல ஆழத்திற்கு ப்ளேடை இறக்கினால் மந்திரி உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று கணக்கிட்டிருந்த அவன், நிகழ்ச்சி முடிந்து புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகும் சமயம் பார்த்து நீதிவண்ணனை நோக்கி பறக்கும் பாம்பு போல் பாய்ந்தான். ஆனால் எப்போதுமே விழிப்புடன் இருக்கும் பச்சைப் பூனைப் படையினர் அவனை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மிகுந்த வீரத்துடன் செயல்பட்டு மந்திரி நீதிவண்ணனைக் காப்பாற்றிய பச்சை பூனைப் படையினருக்கு உடனடியாக பதவி உயர்வு அளிக்கப்படுவதாக அரசு உடனே அறிவித்தது.

இந்தக் கொலை முயற்சிக்காகத்தான் பத்மநாபன் குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ளான். விசாரணையில் அரசு வழக்கறிஞர், “இந்த ப்ளேடின் மூலம் மந்திரியை கொல்ல முடியும் என்ற நம்பிக்கை உனக்கு நீ கொலை முயற்சி செய்த அன்று இருந்ததா?” என்று கேட்க, “முழு நம்பிக்கை எல்லாம் இல்ல. ஏன்னா மந்திரியை சுத்தி காவல் காக்குற பச்சை பூனைப்படையினர் அதற்குள்ளால என்ன துப்பாக்கியால சல்லடையாக்கும் வாய்ப்பு அதிகம்னு எனக்கு தெரியும். இருந்தாலும் கருத்தா செயல்பட்டா என்னோட முயற்சி ஒருவேளை வெற்றியடையலாம்னு தோணிச்சு.” என்றான். அதைக் கேட்ட அரசு வழக்கறிஞர், “அப்போ சம்பவம் நடந்த அன்று உங்களுக்கு மந்திரியைக் கொலை செய்ற எண்ணம் இருந்தது?” என்று கேட்க பத்மநாபன், “ஆமாம் இருந்தது.” என்று பதில் கூற உடனே அரசு வழக்கறிஞர், “யுவர் ஆனர் குற்றம் சாட்டப்பட்டுள்ள கைதி மந்திரியைக் கொலை செய்யும் எண்ணத்துடன்தான் ப்ளேடால் அவரைத் தாக்க முயற்சித்திருக்கிறார். அதனால் அவருக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார். அதைக் கேட்டு பயந்து போன பத்மநாபன், “இல்ல. எனக்கு அப்படி ஒண்ணும் எண்ணம் இல்லை. நான் சும்மாதான் சொன்னேன்.” என்று கூறினான். உடனே நீதிபதி “ஆடர்... ஆடர்...” என்று சுத்தியலால் அடித்துக் கூறினார்.

பத்மநாபனை விசாரித்த நேரத்தில்தான் குற்றம் நடந்த பிண்ணனி சம்பவங்கள் நீதிமன்றத்தத்தின் பார்வைக்கு வந்தது. சாலைகளுக்கு சேதம் விளைவித்த விசயத்தில் மெத்தன போக்கை கடைபிடித்ததற்காக அரசை கண்டனம் செய்த நீதிபதி, அரசு நீதிமன்றத்தில் அதைக் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டார்.

நீதிபதியின் உத்தரவு படி சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அரசு அமைத்தது. நாட்டின் மிகச் சிறந்த நிபுணர்களைக் கொண்ட அந்தக் குழு தன்னுடைய அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்பித்தது. அதில் மூத்திரம் பெய்ததால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும், அது நடந்த பிண்ணணியைப் பற்றியும் தெளிவாக விவரிக்கப்பட்டிருந்தது. அறிக்கையை படித்த நீதிபதி பத்மநாபன் தவிர சாலை காணாமல் போவதற்கு காரணமான அரசு பள்ளி மாணவர்கள் மேலும் வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்கு உத்தரவிட்டதோடு, பொது சொத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சாலையோரம் இருக்கும் பள்ளிக்கூடத்தையும் உடனே இடிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார்.

நிதிமன்ற உத்தரவிற்கிணங்க அரசு அந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் எல்லோரையும் கைது செய்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியது. மேலும் பள்ளிக்கூடத்தை இடித்து தொழில் வளைச்சியை பெருக்கும் பொருட்டு ஒரு சர்வதேச கம்பெனிக்கு அந்த இடத்தை விற்றது. அதன் மூலம் ஏற்படும் முதலீட்டால் மூன்று பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் ஒன்பது பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அரசு தெரிவித்தது. ஆறாகிப் போன சாலையின் இருபுறமும் இருந்த நிலத்திற்கும், கட்டிடங்களுக்கும் சொந்தக்காரர்கள் அனைவரும் ஆற்றங்கரையிlள்ள பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகக் காரணம் காட்டப்பட்டு அங்கிருந்து அப்புறபடுத்தப்பட்டனர். கையகபடுத்தப்பட்ட நிலத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவற்றை தனியாருக்கு விற்பதற்கு அரசு முடிவு செய்தது. டெண்டர் மூலம் விற்பனை செய்வதால் ஏற்படும் ஊழலை தடுக்கும் பொருட்டு நிலமனைத்தையும் நாட்டின் அதிபருக்கே விற்பது என மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மந்திரி நீதிவண்ணன் உயிர் தப்பிய பின்னும் நீதிமன்றமும், அரசும் பத்மநாபனை தண்டிப்பதற்கு ஏன் இவ்வளவு வேகம் காட்டியது என்பது சிலருக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் பத்மநாபனின் செயலின் பின்விளைவுகள் எந்த அளவுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை கவனித்தால் அதற்கான நியாயத்தை கண்டுகொள்ள முடியும்.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கையில் பத்மநாபனையும் அரசு பள்ளி மாணவர்களையும் பின்பற்றி சில விசமிகள் நகரத்தின் மையப்பகுதியிலுள்ள ஒரு அரசு அலுவலக கட்டிட சுவர் மீது மூத்திரம் பெய்ய அந்த கட்டிடம் இடிந்து போனது. உடனே பொது சொத்தை சேதம் விளைவிக்கும் விசமிகளை தடுக்க பாலங்கள், ரோடுகள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றிற்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் மூத்திர கலகக்காரர்களின் செயலால் மேம்பாலங்கள், சாலைகள், அரசு கட்டிடங்கள் என பலவும் இடிந்தும், கரைந்தும் போயின. வாகன ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை பாலங்களின் மேல் ஓட்டிச் செல்ல மறுத்தனர். ஸ்தம்பித்துப் போன அரசு நகரெங்கும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியது. வெளியிடங்களில் மூத்திரம் பெய்வதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. அதை மீறி மூத்திரம் பெய்பவர்களை கண்டதும் சுடுவதற்கு காவல் துறைக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து தடையுத்தரவை மீறி பொது இடங்களில் மூத்திரம் கழித்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த 4759 பேர் உயிரிழந்தனர். கோபமடைந்த மூத்திர கலகக்காரர்கள் அதிரடி படையினர் தங்கியிருக்கும் கட்டிடத்தை சுற்றி மூத்திரம் கழிக்க அது இடிந்து 3821 அதிரடி படையினர் இறந்து போயினர். நிலமையை சமாளிக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. பீரங்கி வண்டிகள் நகரை சுற்றி வந்தவண்ணமிருந்தன. விசமிகளென்று சந்தேகிக்கப்படும் நபர்கள் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில் வாழும் தெய்வங்களான தலைவர்களின் சிலைகளை மூத்திரம் கழித்து தகர்க்க விசமிகள் திட்டமிட்டிருப்பது தெரியவர, அதை தடுக்கும் விதமாக அங்கும் போலீஸ் பந்தோபஸ்து போடுவதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது. தலைவர்களை பாதுகாப்பதற்கு தேவைப்படும் போலீசாரின் எண்ணிக்கையே குறைவாயிருக்கும் போது அவர்களின் சிலைகளை பாதுகாப்பிற்கு போலீசாரை பயன்படுத்துவது சரியல்ல என்று உயரதிகாரிகள் வாதிட்டனர். அதை ஏற்றுக்கொண்ட நாட்டு அதிபர் தலைவர்கள் சிலைகள் இருக்கும் இடங்களில் மூத்திரம் கழிக்க முயற்சிப்பவர்கள் நாணும்படி, “நாய்கள் மூத்திரம் கழிக்கும் இடம்.” என்ற அறிவிப்பு பலகை நாட்டுவதற்கு ஆலோசனைக் கூற, அதை அப்படியே அதிகாரிகள் அமுல் படுத்தினர். விசயத்தை எப்படியோ தெரிந்துகொண்ட நாய்கள் தலைவர்கள் சிலைகள் இருக்கும் இடத்திற்கு சென்று மூத்திரம் கழிக்க நகரத்திலிலுள்ள பல தலைவர்களின் சிலைகள் உருதெரியாமல் சிதைந்து போக, அதிகாரிகள் அந்த அறிவிப்பு பலகைகளை அப்புறபடுத்த வேண்டியதாயிற்று. பின்னர் புதிதாக பயிற்சிப் பெற்ற போலீசாரை கொண்டு தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்த எத்தனிக்கும் நாய்கள் சுட்டுக்கொல்லப்பட்டன. ஒரு நாளில் மட்டும் 1218 நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. வாயில்லா ஜீவன்களை சுட்டுக்கொல்வதற்கு மனித உரிமை போராளிகள் கடும் கண்டனம் தெரிவிக்க, வாயில்லா ஜீவன்களை ரப்பர் தோட்டாக்களை கொண்டு சுடுமாறும் வாய்கொழுப்பு பிடித்த மனிதர்களை மட்டும் நிஜ தோட்டாக்களைக் கொண்டு சுடுமாறும், போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டன.

நகரை மூத்திரக்காரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகளை கண்டறிவதற்காக ஆய்வுக் குழுவொன்றை அரசு நியமித்தது. கீழ்மட்டத்து மக்களான சேரிவாசிகள், பிச்சைகாரர்கள், கூலி வேலை செய்வோர் ஆகிய விசமிகள்தான் பொதுவாக பொது இடங்களில் மூத்திரம் கழித்து பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கின்றனர் என்றும், நிலமையை சமாளிக்க ‘அதிநவீன தாழ்தள சொகுசு கழிவறைகள்’ கட்டப்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் ஆய்வுக் குழு தன்னுடைய அறிக்கையில் கூறியது. மேலும் தூபம் நதிக்கரையிலிருக்கும் சேரிவாசிகள் மூத்திரம் பெய்வது நதியில் கலப்பதால் சிங்காரப்பட்டினம் முழுவதுதிலும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சேரிகளை எல்லாம் அப்புறபடுத்துவது நலம் என்றும் அந்த ஆய்வுக்குழு அறிக்கை தெரிவித்தது. ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளை எல்லாம் அரசு ஏற்றுக்கொண்டு செயல்பட ஆரம்பித்தது. சுமார் 30,000 கோடிச் செலவில் ஜெர்மானிய தொழில்நுட்பத்துடன் ‘அதிநவீன தாழ்தள சொகுசு கழிவறைகள்’ நகரெங்கும் கட்டப்பட்டு மூத்திரம் கழிப்பதற்கு 20 ரூபாய், மலம் கழிப்பதற்கு 50 ரூபாய் என்று கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால் சில விசமிகள் கழிவறை கட்டிடங்களில் எழுதப்பட்டிருக்கும் ‘அதிநவீன தாழ்தள சொகுசு கழிவறை’ என்ற சொற்றொடரிலுள்ள ‘கழிவறை’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘கல்லறை’ என்று எழுதி வைக்க, அதன் உள் அர்த்தத்தை புரிந்துகொண்ட மக்கள் ஒருவரும் அந்த கழிவறைகளை எட்டிக் கூடப் பார்க்கவில்லை. பின்னடைவுகள் இருந்தாலும் அரசு ஆய்வுக்குழுவின் பரிந்துரையை தொடர்ந்து அமுல் படுத்த முனைந்தது. சமூக பாதுகாப்பை கருத்தில் கொண்டு தூபம் நதிக்கரையில் குடியிருப்போர் எல்லோரும் பதினைந்து தினங்களுக்குள் அங்கிருந்து இடத்தை காலிசெய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. வசிப்பதற்கு வேறு இடங்கள் இல்லாத சேரிவாசிகள் யாரும் தங்கள் வீடுகளிலிருந்து இடம் பெயரவில்லை. மாற்று வசிப்பிடம் இல்லாததால்தான் சேரிவாசிகள் சேரிகளிலிருந்து வெளியேறவில்லை என்பதை புரிந்துகொண்ட அரசு அவர்களுக்காக அதிநவீன முள்வேலி முகாம்களை ஏற்படுத்தியது. இருப்பினும் யாரும் நகருவதாக தெரியவில்லை. கடைசியில் விமானங்கள் மூலம் குண்டு வீசி அவர்களை அப்புறபடுத்துவது என்ற முடிவுக்கு அரசு வர நடுங்கிப் போன சேரிவாசிகள் எல்லோரும் தாங்களாகவே முள்வேலி முகாம்களுக்குள் சென்று தங்களை அடைத்துக்கொண்டனர். முள்வேலி முகாம்களுக்குள் இருப்பவர்களுக்கு பொழுது போவதற்கு வசதியாக ஒரு குடும்பத்திற்கு 2 தொலைகாட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. மனித உரிமை போராளிகளின் கோரிக்கைக்கு இணங்க அதிநவீன சொகுசு முள்வேலி முகாமிற்குள் அடையுண்டிருக்கும் மக்கள் அனைவரையும் 3015 கடைசிக்குள் மீள்குடியேற்றம் செய்யப்போவதாக நாட்டு அதிபர் உறுதியளித்தார். அதிபரின் இந்த தியாகத்தை புகழ்ந்து புலவர் மன்றாடிமுத்து புகழ்ப்பா ஒன்றை இயற்றினார். அது ஒளி ஓவியமாக எல்லா தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.

தூய்மை படுத்தப்பட்ட தூபம் நதிக்கரையெங்கும் உல்லாச விடுதிகளும் நடன அரங்குகளும் அமைத்து கொள்வதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு அனுமதி கொடுத்தது. அதன் விளைவாக சிங்காரபட்டினத்தை சுற்றி ஓடும் தூபம் நதிக்கரை எங்கும் கேளிக்கை விடுதிகளும், நட்சத்திர விடுதிகளும், நடன கூடங்களும் எழுப்பப்பட்டன. உல்லாச பயணிகளை நன்கு கவனிக்கும் பொருட்டு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து குவிந்த அழகிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட அழகிகள் கேளிக்கைக்கு வருவோரை எப்படி கவனித்துக்கொள்வது என்று சிறப்பு பயிற்சிகள் கொடுத்தார்கள்.

பத்மநாபனின் செயலால் ஏராளமான பாதகமான விளைவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவன் அதிக தண்டனையில்லாமல் தப்பித்துக்கொள்ள முடியும் என்றுதான் பெருவாரியான மக்கள் நம்பினார்கள். ஆனால் அவன் சிறைக்குள் முன் யோசனையின்றி செய்த செயல் அவனுக்கு எதிராக வந்து முடிந்தது.

சாலை மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரி எதிர்கட்சித் தலைவரின் சவாலை ஏற்று தன்னால் பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்தில் பயணம் செய்ய முடியும் என்று கூறினார். பிறகுதான் தன்னுடைய செயலாளர் சொன்னதிலிருந்து பேருந்தில் அதுவும் காலையில் பயணம் செய்வது என்பது தற்கொலைக்கு சமம் என்பதை உணர்ந்தார். இருந்தாலும் தன்னுடைய செயலாளர் சொல்வதில் உண்மையிருக்கிறதா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. அந்நேரத்தில் எதேச்சையாக அங்கிருந்த தன்னுடைய துணை மந்திரி மாயவாணனை பார்க்க அவரின் கண்கள் சந்தோசத்தில் மின்னுவதை கவனித்தார். தான் இறந்தால் தன்னுடைய பதவியை அடைய முடியும் என்ற நினைப்புதான் அவருடைய சந்தோசத்திற்கு காரணம் என்று தெரிந்துகொண்டார். உடனே தான் ஏற்றுக்கொண்ட சவாலிலிருந்து பின்வாங்கி தன்னுடைய செயலாளர் மூலம், “உடல் நலமில்லாத காரணத்தால் மந்திரி நீதிவண்ணனால் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முடியாது.” என்று அறிக்கை கொடுக்குமாறு பணித்தார். செயலாளர் அவருக்கான அறிக்கையை தயாரித்து நாட்டு அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பினார். அறிக்கையை கண்ட அதிபர் உள்துறை செயலாளரிடம் அது பற்றி விவாதித்தார். அவர், உளவுத்துறை கொடுத்த தகவலின் படி முதலில் எதிர்கட்சி தலைவர் அதிபரைத்தான் பேருந்தில் பயணம் செய்யுமாறு கேட்க விரும்பியதாகவும், ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல அவர் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரிக்கு சவால் விட்டதாகவும், மந்திரி குறிப்பிட்ட நாளில் பேருந்தில் பயணம் செய்யத் தவறினால் அவர் மீண்டும் அதிபரையே பேருந்தில் பயணம் செய்து பார்க்குமாறு கோரக் கூடும் என்றும், அது மரணத் தண்டனைக்கு சமம் என்றும் கூறினார். அது எந்த அளவுக்கு உறுதியாக நடக்கக் கூடிய விசயம் என்பதற்கு சாட்சியாக பத்திரிகைகள் இரண்டு தினங்களில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியின் விளைவை முன்கூட்டியே கணித்து அன்று வெளிவரும் செய்தித்தாள் பதிவுடன் மந்திரி நீதிவண்ணனின் இறப்பை கொண்டாடும் இரங்கல் குறிப்புகளையும், அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த சிறப்பு இணைப்பு பகுதியையும் அச்சிட்டி வைத்திருப்பதை சுட்டிக்காட்டினார். நிலமையை புரிந்துகொண்ட நாட்டு அதிபர் மந்திரி நீதிவண்ணனை தொலைபேசியில் அழைத்து கண்டிப்பாக திட்டமிட்ட படி அவர் பேருந்தில் பயணம் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டார். மந்திரி அதிபரிடம் தான் இறந்தால் தான் வகிக்கும் பதவியை தன்னுடைய மனைவியிடம் ஒப்படைக்குமாறு வேண்டினார். மூத்திர கலகத்தால் சாலைகளும், மேம்பாலங்களும் சேதபட்டிருக்கும் விதத்திலிருந்து அது எவ்வளவு பணம் சம்பாதிக்கக் கூடிய இலாகா என்று ஏற்கனவே உணர்ந்திருந்த அதிபர் அந்த இலாகாவை தன் குடும்பத்திலுள்ளவரைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்க கூடாதென்று முன்கூட்டியே முடிவு செய்திருந்தார். இருப்பினும் சாகப்போகும் தன்னுடைய மந்திரிக்கு நம்பிக்கையூட்டுவதற்காக அவர், “கண்டிப்பா. நீ கட்சிக்கு செய்ற தியாகத்துக்காக அது கூட செய்யலன்னா எப்படி?” என்று கூறினார். தன் மனைவிக்கு தான் வகிக்கும் இலாகா கிடைக்கும் என்ற நம்பிக்கை மந்திரி நீதிவண்ணனுக்கு இருந்தாலும் அவர் மரணத்தை நினைத்து மிகவும் நடுங்கிப் போனார். தனக்குப் பதிலாக தன்னுடைய இலாகாவிலிருந்து வேறு யாரையாவது பயணம் செய்ய சொல்லலாமா என்ற யோசனை ஓடியது அவருக்கு. பதவி ஆசைக்கொண்ட தன்னுடைய துணை மந்திரி ஒருபோதும் பேருந்தில் பயணம் செய்ய ஒத்துக்கொள்ளமாட்டார் என்று அவருக்கு தெரிந்திருந்தது. அதனால் அவரிடம் எதுவும் கேட்காமல், தன்னுடைய செயலாளர் ஒருவேளை ஒத்துக்கொள்ளக் கூடும் என்ற அசட்டு நம்பிக்கையில் அவரிடம், “நீங்க எனக்குப் பதிலா பேருந்துல பயணம் செய்ய முடியுமா?” என்று கேட்க அவர், “நான் புள்ளக் குட்டிக் காரன் சார். என்னால எல்லாம் முடியாது.” என்று மறுத்துவிடுகிறார். கடைசியாக தன்னுடைய மனைவியிடம், “நீயாவது எனக்காக பேருந்துல பயணம் செய்யமாட்டியா?” என்று கேட்க அவள், “நானா ஒங்கள பேருந்துல போகச் சொல்லி சொன்னேன்? முடிவெடுக்கும் போதே யோசித்திருக்கணும்” என்று கழண்டு கொண்டாள். வேறு வழி தெரியாத மந்திரி தன்னுடைய வழக்கறிஞரை வரவழைத்து தன்னுடைய சொத்துக்கள் யார் யாருக்கு போக வேண்டுமென்று உயில் எழுதினார்.

எதிர்கட்சித் தலைவர் விட்டிருந்த சவாலின் படி குறிப்பிட்ட தினத்தன்று காலையில் 8 மணியிலிருந்து அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக ஏதாவது ஒரு பேருந்தில் ஏறுவதற்காக மந்திரி நீதிவண்ணன் ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார். எல்லா பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடைசியாக அதிக கூட்டம் இல்லாதது போல் தோற்றமளித்த பேருந்தில் ஏற அது வெறும் மாயத்தோற்றம் என்பதை உணர்ந்துகொண்டார். அந்த பேருந்தில் ஏறுவதற்காக ஒன்றே முக்கால் மணிநேரத்திற்கும் அதிகமாக காத்திருந்த பயணிகளும், மந்திரியின் இறுதி மூச்சு நிற்பதை நேரில் பார்ப்பதற்காக காத்திருந்தப்வர்களும், பேருந்தின் ஒவ்வொரு துவாரங்களின் வழியாகவும் தங்களை சொருகிக்கொண்டனர். ஒரு பக்கமாக சாய்தே செல்லும் அளவுக்கு பேருந்து நிரம்பி வழிந்தது. பேருந்தின் எடையினால் அதுச் செல்லும் பாதையெங்கும் சாலைகள் உடையும் சத்தம் கேட்க, அந்த சத்தத்தினுள் மந்திரியின் எலும்புகள் உடைபடும் ஓசை யாருக்கும் கேட்காமல் அமிழ்ந்து போயிற்று.



மந்திரி ஏறியிருந்த பேருந்தை தொடர்ந்த பயணிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அந்த பேருந்தையே அமரர் ஊர்தியாகக் கொண்டு அது செல்லும் இடங்களெல்லாம் பூக்களை சொரிந்தனர். அவர்கள் பின்னால் ஏராளமானோர் சாவு மேளத்துக்கு ஏற்ப சாவு நடனமாடியபடி சென்றனர். மந்திரியின் இறுதி ஊர்வலமானது பத்மநாபன் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வழியாக கடந்து செல்ல, அவன் அவனையறியாது உணர்ச்சி வசத்தில் தான் களைத்து கீழே விழுமளவிற்கு நடனமாடினான். அதை போலீசார் ரகசிய கேமராக்கள் மூலம் படம் பிடித்து அதை நீதிமன்றத்தில் அவனுக்கு எதிரான சாட்சியமாக சமர்பித்தனர்.

தீர்ப்பு நாளும் வந்தது. அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்க நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் மூத்திர கலகக்காரர்களுக்கு பயந்து தண்ணீர் விற்பனையும் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டது. நகரிலுள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் குழாய் நீர் விநியோகமும் நிறுத்தப்பட்டது. ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இத்தகைய பதட்டமான சூழ்நிலையில் நீதிபதி தன்னுடைய தீர்ப்பை படிக்க ஆரம்பித்தார். “குற்றவாளி பத்மநாபனின் கொலை முயற்சி வெற்றி பெறாமல் போனாலும், அவனுக்கு கொலை செய்யும் எண்ணம் இருந்தது என்பது மந்திரியின் மரணத்தை தொடர்ந்து அவன் சிறையில் சந்தோசத்துடன் நடனமாடியதிலிருந்து உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.” நீதிபதியின் வார்த்தைகளைக் கேட்ட பத்மநாபன் குறுக்கிட்டு, “ஐயா நான் வெளில கேட்ட சாவு மேளத்துக்குதான் நடனமாடினேனேத் தவிர மந்திரி செத்ததுக்காக ஆடல.” என்று கூறினான். கோபமடைந்த நீதிபதி மேசையின் மீதிருந்த மர சுத்தியலை எடுத்து பத்மநாபன் மீது வீசினார். பத்மநாபன் தலையை சரித்துவிடவே அது ஒரு போலீஸ்காரன் தலையில் பட அவன் அப்படியே செத்து கீழே விழுந்தான். நீதிபதி அசராமல் தொடர்ந்து தன்னுடைய தீர்ப்பை படித்தார். “மேலும் குற்றவாளி பயன்படுத்திய ப்ளேடின் பெயர் ப்ரெஞ்சு புரட்சியின் போது சிரச்சேதம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கில்லெட்டின் இயந்திரத்தின் பெயரை ஒத்திருப்பதால் அவனுடைய குற்றம் ஐயமற நிரூபிக்கபட்டிருக்கிறது.” நீதிபதியை மீண்டும் இடைமறித்த பத்மநாபன், “ஐயா, எனக்கு கில்லெட்டின் இயந்திரம்னா என்னன்னே தெரியாது.” என்று கூறினான். “விட்டா இந்த தேவடியாப்பய நம்மளையே குற்றவாளி கூண்டுல நிக்க வச்சிருவான் போல இருக்கு.” என தனக்குள் முனகிய நீதிபதி, “அந்த நாயோட வாய பிளாஸ்திரி போட்டு ஒட்டுங்க.” என்று கத்த அங்கிருந்த போலீசார் கண நேரத்தில் அவனுடைய வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டினர். திருப்தியடைந்த நீதிபதி தொண்டையை செருமிக்கொண்டு தீர்ப்பை மீண்டும் வாசித்தார். “இந்த மாதிரியான சமூக விரோதிகளுக்கு கடும் தண்டனை கொடுக்காவிடில் மக்கள் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள். அதனால் குற்றவாளிக்கு இரட்டை தூக்குத் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கிறேன்.” தீர்ப்பைக் கேட்ட பத்மநாபன் பயத்தில் கால்வழியாக மூத்திரம் பெய்துவிட நீதிமன்ற கட்டிடம் நிலநடுக்கம் வந்தது போல் அதிர்வுடன் இடிய தொடங்கியது. பயந்துபோன போலீசாரும், அரசு அலுவலகர்களும், நீதிபதியும் நீதிமன்றத்திலிருந்து உயிர் பிழைத்தால் போதுமென்று தப்பியோடினர். பத்மநாபனும் கூட்டத்தோடு கூட்டமாக அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.


---------------------------

நன்றி: அடவி
ஜனவரி, 2012

Thursday, January 26, 2012

Petty Intellectuals and Gramsci


Jose Antoin

Reading Antonio Gramsci’s work demands extra care from the reader. There are two major reasons for that. 1. Gramsci avoided using some specific words to evade censorship. (For example he uses the word ‘strata’ to denote ‘class’.) 2. Most of his works are fragmentary in nature. This leaves much room for reinterpretation and misinterpretation. He generally discusses the ‘functional aspects’ of the ‘state’ rather than ‘systematically defining’ it. Only in few places he concretely defines ‘state’.

Now coming to the discussion on the statement of SLDF titled ‘An appeal to the Tamil community and its Civil and Political Representatives’ (on Deepam TV), one hears Nirmala asking Tu. Senan to read Antonio Gramsci to know about the structure of the ‘state’. Tu. Senan asked her the reason for directing the appeal to the Tamil civil society. Through her statement she implies that the Tamils do have state power in Gramscian sense. Senan did not have time to answer her as the discussion came to an end after her grotesque misinterpretations.

According to Gramsci, state is not only sustained by the ‘political class’; but also by the ‘civil society’. So, it is necessary for the proletariat (oppressed) to attain ‘cultural hegemony’ to overthrow the capitalist society (oppressors). In the Sri Lankan scenario the ‘racial contradiction’ is the prominent issue. Here ‘oppressive’ Sinhala state is sustained by the ‘Singalese civil society’ through its ‘consent’. And the ‘oppressed’ Tamils are marginalized in the political sphere. Tamils did attain cultural hegemony for the formation of an independent state; but so far they have failed to achieve their goal. Tamils don’t have equal constitutional rights. They are politically and /or economically dispossessed and at the end of Eelam War 4 lost whatever (de facto) state power they had. The Sinhala forces forcefully occupy their lands. Many have become refugees in their own land. Their cultural tradition is trampled down by the oppressors. In such a situation how can they enjoy state power? Without state power, what they can do for the aggrieved Muslim community? After all the Sinhala state is not even ready to negotiate about the devolution of police and land power to the Tamils. No, Tamils do not enjoy ‘state power’ in Gramscian sense. Then why do they direct the appeal to the Tamil civil society and its civil and political representatives? Senan says their intention is not genuine. Nirmala answers ‘it is a lie’? It is non answer. She can’t answer. So she just jumps from one issue to another which is irrelevant to the questions raised.

Nirmala tells that the ‘appeal’ should be accepted on its face value. Thus she wants us to isolate the ‘appeal’ from the major political issues confronting the ‘whole’ Tamil community. No, we can’t accept it on its face value. We all know it is a divisionary act; an act which will divide Tamils and Muslims; an act the racist Sinhala government itself would love to employ. The British used the same divide and rule policy in India. Just as the Justice Party which wanted to perpetuate the British rule in India, these vested interests want to perpetuate the Sinhala rule in Eelam. Like SLDF the Justice Party tried to portray certain issues in isolation and the British supported them to the hilt. In Nirmala’s view Sinhala racism can not be countered by Tamil nationalism. She does not offer any alternative. But she vouches for the ‘appeal’ which narrows down the focus. Now we get the real picture. Their intention is suspect. They just want to ease out the Sri Lankan government at a time when the international pressure is mounting to investigate war crimes and settle the Tamil issue.

It is time we expose these petty intellectuals and their petty politicking.


Links:

http://www.youtube.com/watch?v=f6dpcfv0cS4&feature=related

http://www.youtube.com/watch?v=s_1mP7vGdi0&feature=related

http://www.youtube.com/watch?v=jYIDZ6bs9dc&feature=related

http://www.youtube.com/watch?v=W08QxE_Ampw&list=UUJ522ZmvNm3NX0GtxBIhEFg&index=1&feature=plcp

Wednesday, June 8, 2011

மரணத்தின் குரல்

ஜோஸ் அன்றாயின்

வாழ்வு நித்தியமானதல்ல. அது சாவில் முடிகிறது. இந்த சாவு நித்தியமானது. தன்னுள் உயிர்த் துடிப்பை கொண்டுள்ள ஒவ்வொன்றும் சாவின் நிழலை தன்னகத்தே கொண்டுள்ளது. இருப்பினும் நாம் பிடிவாதமாக திருமணம் செய்து கொள்ளுகிறோம். குழந்தைகள் பெற்றுக் கொள்கிறோம். சாவு நம்மை பார்த்து புன்னகைக்கும் போது அலறியடித்தபடி ஓட முயற்சிக்கிறோம். ஆனால் சாவின் கருநிற சவச்சேலையானது நம்மை எப்போதுமே பொதிந்துள்ளதை ஏனோ நாம் மறந்துவிடுகிறோம்.





சாவின் விளிம்பில் இருப்பதை போல நான் சாவைப் பற்றிய எண்ணத்தில் மூழ்கியுள்ளேன். உண்மையை சொல்லப் போனால் நான் ஏற்கனவே இறந்து விட்டேன். உயிரற்ற பொருட்களாலான உலகம் சூழ்ந்திருக்க, விரும்பாத நேரத்தில் விரும்பாத வேலையை செய்து கொண்டு நானும் செத்துபோன உலகின் ஒரு பகுதியாக மாறிவிட்டேன். ஆன்மா இறந்துவிட்ட பிறகு இவ்வுடல் மட்டும் எதற்காக வாழ வேண்டும்?

இருண்டிருக்கும் இந்த அதிகாலையில் படுக்கையில் படுத்த வண்ணம் மரண பூதங்கள் என்னை சுற்றி ஓலமிடுவதை காண்கிறேன். நான் தப்பியோட முயற்சிக்கவில்லை. ஒருவேளை நான் கதியற்றவனாக இருக்கலாம். நான் மேலே கூரையை நோக்கி பார்வையை செலுத்த துருப்பிடித்த இறக்கைகளுடன் கூடிய ஒரு மின்விசிறியை காண்கிறேன். வெகு நாட்களுக்கு முன்னால் செத்துபோன அது இன்று பூதம் போல காட்சியளிக்கிறது. அது என்னை வசீகரிக்கிறது. அதில் ஒரு தூக்குக் கயிறை மாட்டு இந்த உடலைத் தக்கவைக்கும் வளர்சிதை மாற்றத்தை நிறுத்திவிட்டாலென்ன? சிறு நார் இழைகளாலான கயிறு என் கழுத்தை இறுக்கும். என் உடலின் எடையினால் கயிறு கீழிறங்கும். துருபிடித்த மின்விசிறி கிறிச்சிட்ட சப்தத்தை எழுப்பும் வண்ணம் என் அங்கங்கள் போராடும். பின்னர் படிப்படியாக அமைதியாகி மின்விசிறியும், கயிறும், உடலும் ஒரு சேர சலனமற்ற நிலையை அடையும்.

சாவு நான் நினைத்ததை போல அவ்வளவு எளிதானது அல்ல போலும். அது பயங்கரமானதாகவும், வேதனை மிகுந்ததாகவும் தோன்றுகிறது. சிரிக்காதீர்கள். இவனெல்லாம் எங்கே தற்கொலை செய்துகொள்ள போகிறான் என்றுதானே நினைக்கிறீர்கள்? நீங்கள் நினைப்பது தவறு. நான் ஒன்றும் நீங்கள் நினைப்பது போல் கோழையல்ல. நான் பிறந்ததும் வளர்ந்ததும் சாவின் மணத்தோடுதான். அதனால் சாவு எனக்கு அன்னியமானதல்ல. நானும் அதை பார்த்து பயப்படுவதில்லை. சாவிற்கும் எனக்கும் உள்ள நெருக்கத்தை தெரிந்து கொண்டால் நீங்கள் அதை புரிந்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் சிறுவனாயிருக்கும் போது எனது அம்மா வழி பாட்டி இறந்துவிட்டாள். அது பற்றி எனக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை என்று அம்மா கூறுவாள் ஏனென்றால் நான் அப்போது மிகவும் சிறியவனாக இருந்தேனாம். ஆனால் அது உண்மையல்ல. எனக்கு என் பாட்டியின் சாவு பற்றி நன்றாக ஞாபகம் இருக்கிறது. செத்துபோன அவளின் உடல் ஒரு இருண்ட அறையில் கிடத்தப்பட்டிருந்தது. மங்கலாக எரிந்துக்கொண்டிருந்த மெழுகுவர்த்திகள் சுவர்களின் மீது இருண்ட நிழல்களை ஏற்படுத்த, மலிவான வாசனைத் திரவியம் துக்கம் நிறைந்த வாசனையை பரப்பிக்கொண்டிருந்தது. அவ்வாசனை சாவின் வாசனையாக எனக்கு பட்டது. அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்களில் சிலர் கைகளில் ஜெபமாலையை வைத்துக்கொண்டு ஏதோ ஜெபத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். நான் மிகவும் நேசிக்கும் மாமியும் அங்கிருந்தாள். அவளும் தன் கையிலுள்ள ஜெபமாலையை உருட்டிய வண்ணம் ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தாள். நான் அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். அவர்கள் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. எல்லோரின் பார்வையும் பாட்டியின் உடல் கிடத்தப்பட்டிருக்கும் கட்டிலை நோக்கியே இருந்தது. பாட்டியின் உடல் ஒரு வெள்ளைச் சேலையால் போர்த்தப்பட்டிருந்தது. ஒரு வயதான மூதாட்டி கையிலுள்ள ஒரு சிறு விசிறியால் பாட்டியின் உடலை மொய்க்க வரும் ஈக்களை விரட்டிக்கொண்டிருந்தாள்.

நான் எரிந்துகொண்டிருக்கும் மெழுகுதிரிகளிலிருந்து உருகி வழியும் மெழுகை சேகரித்து பந்து போல் உருட்டி அந்த மெழுகுப் பந்தைக் கொண்டு அங்கிருந்தவர்களுடன் விளையாட முயற்சித்தேன். அவர்கள் எல்லோரும் என்னுடன் கோபத்தில் இருப்பது போல் தோன்ற நான் என்னை மிகவும் நேசிக்கும் மாமியுடன் விளையாடும் எண்ணத்துடன் மெழுகுப் பந்தை அவள் பக்கம் உருட்டிவிட்டேன். அவள் ஜெபமாலையை உருட்டுவதை நிறுத்திவிட்டு என்னை பார்த்து முறைத்தாள். நான் பின் வாங்கிவிட்டேன். அவ்விடம் எனக்கு மூச்சுத் திணறுவதாகத் தோன்ற என் மெழுகுப் பந்தை எடுத்துக் கொண்டு வெளியே வராண்டாவுக்கு வந்து விட்டேன். அங்கு என்னுடைய தாத்தா ஒரு மர பெஞ்சின் மேல் உட்கார்ந்திருந்தார். அவருடைய முகம் வெளிறிப் போயிருந்தது. கண்கள் சிவந்து காணப்பட்டன. நான் அவரருகில் சென்று அமர்ந்து கொண்டேன். அவரும் கையில் ஒரு ஜெபமாலை வைத்திருந்தார். ஊதா நிறத்திலிருந்த அது மிக அழகாக இருந்தது. நான் அதை என் விரல்களால் ஆசையுடன் தொட்டுப்பார்க்க தாத்தா ஜெபமாலையை என் கையில் கொடுத்தார். பெரியவர்கள் போல் அதன் மணிகளை உருட்ட எனக்கு சந்தோசமாக இருந்தது. புன்னகையுடன் தாத்தாவிடம் செபமாலையை திருப்பிக் கொடுத்தேன். அவர் திருப்பி புன்னகைக்கவில்லை. மாறாக என் கைகளை லேசாகப் பிடித்து அழுத்தினார்.

அப்போது வீட்டினுள்ளிருந்து பெண்கள் கதறி அழும் சத்தம் கேட்க, சில பேர் இறந்துபோன என் பாட்டியை ஒரு பெட்டியில் வைத்து மூடி தோளில் சுமந்த வண்ணம் எங்கோ கொண்டு சென்றனர். ஒரு பெரிய கூட்டம் அவர்களை தொடர்ந்து பின்சென்றது. சில பெண்கள் கதறி அழுதபடி அக்கூட்டத்தின் பின்னால் ஓடினர். என் அம்மாவும் அவர்களுடன் ஓட நானும் அழுதபடி அவள் பின்னால் ஒடினேன்.

பாட்டியின் இறப்பிற்குப் பின் தாத்தாவும் இறந்து போவார் எனவும் அவரையும் ஒரு பெட்டியில் போட்டு புதைத்துவிடுவார்கள் எனவும் நான் பயந்த வண்ணம் இருந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து எங்கள் வீட்டிற்கு வந்து போன வண்ணம்தான் இருந்தார். ஒருநாள் எங்கள் வயல் வேலைகளைக் கண்காணிப்பதற்காக அவர் வந்திருந்தார். அப்போது எங்களுக்கு அரையாண்டு விடுமுறை. ஆதலால் நானும் என் நண்பன் விக்டரும் அவருடன் சென்றோம். வேலையை முடித்து வீடு திரும்பும் போது தாத்தா அம்மாவிடம் “வர்ற வெள்ளி கெழம ஊர் கோயில் திருவிழா ஆரம்பிக்குது பிள்ளைகள கூட்டிகிட்டு வந்திரு.” என்றார். அம்மாவும் “ஆம்” என்று தலையாட்டினாள். நாங்களும் உற்சாகத்துடன் சென்றோம்.


தாத்தா வீட்டை நெருங்க நெருங்க அங்கு விளையாடும் சிறுவர்களின் ஆரவாரம் தெளிவாக கேட்டது. வீட்டு முற்றத்தை அடைந்தவுடன் நானும் அங்கு விளையாடும் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அந்த சந்தோசமான சூழ்நிலையிலும் ஏதோ துக்கம் கவிந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. அங்கிருந்த பெரியவர்களின் முகங்கள் சிறுவர்கள் எங்களால் புரிந்துக்கொள்ள முடியாத ஏதோ ஒன்றை வெளிப்படுத்தின. ஏதோ மனதை நெருட நான் விளையாடுவதை நிறுத்திவிட்டு வீட்டினுள் சென்று என் தாத்தாவின் அறைக்குச் சென்றேன். அவர் அங்கு இல்லை. அவர் படுத்திருக்கும் மரக்கட்டில் எப்போதும் போல பளப்பளத்துக் கொண்டிருந்தது. அவர் படிக்கும் பைபிளும் வழக்கம் போல ஷெல்பின் கீழ் தட்டில்தான் இருந்தது. ஆனால் அவரை அங்குக் காணவில்லை. நான் அடுத்த அறைக்குச் சென்றேன். அங்கு அவர் ஜன்னலை ஒட்டிப் போடப்பட்டிருந்த ஒரு கட்டிலில் படுத்திருந்தார். ஜன்னலில் ஒரு மரச்சிலுவை வைக்கப்பட்டிருந்தது. நான் அவரை “தாத்தா...” என்று கூப்பிட்டேன். அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால் சற்று சத்தமாக மீண்டும் கூப்பிட்டேன். மீண்டும் எந்த பதிலும் இல்லை. எனவே எனது வாயை அவரது காதருகில் கொண்டு சென்று “தாத்தா...” என்று சத்தமாக கூப்பிட்டேன். அவர் கண்களைத் திறந்து என்னைப் பார்த்து லேசாக முறுவலித்துவிட்டுக் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். அப்போது என்னுடைய மாமி அங்கு வந்து சில மாத்திரைகளை அவருக்கு சாப்பிடக் கொடுத்தாள். பின்பு என்னைப் பார்த்து, “தாத்தாவ தொந்தரவு பண்ணாத. வெளிய போயி வெளையாடு.” என்றாள். நான் வேறு வழியில்லாமல் அங்கிருந்து வெளியேறி விளையாடிக்கொண்டிருக்கும் மற்ற சிறுவர்களுடம் மீண்டும் சேர்ந்துகொண்டேன்.

நானும் என் உறவுக்கார சிறுவர்களும் மாலை வரை விளையாடினோம். பின்னர் ஊர் தேவாலய கொடியேற்றத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தேவாலயத்திற்குச் சென்று திருப்பலியில் பங்கு கொண்டோம். திருப்பலி முடிந்து வீடு திரும்பும் போது தாத்தா வீட்டில் பெண்கள் அழுதுக்கொண்டிருந்தனர். ஆண்கள் சில பேர் பரபரப்புடன் அங்கும் இங்கும் போய்கொண்டிருந்தனர். எனது இதயம் பலமாக அடிக்கத்தொடங்கியது. அப்போது ஒரு வாடகைக் கார் திடீரென வந்து வீட்டின் முன் நின்றது. சில ஆண்கள் தாத்தாவை வாடகை காருக்குத் தூக்கி வந்தனர். சில பெண்கள் அழுதவண்ணம் அவர்கள் பின்னால் வந்தனர். என் மாமாவும் இன்னொருவரும் தாத்தாவுடன் பின்னிருக்கையில் அமர்ந்திருக்க முன்னிருக்கையில் என் அம்மா அழுகையுடன் அமர்ந்திருந்தாள். நான் அவள் இருந்த பக்கம் ஓடிச்சென்று என்னையும் கூட்டிச் செல்லுமாறு கூறி அழுதவண்ணம் காரின் கதவை பலமாக அடித்தேன். அப்போது என் அப்பா அங்கு வந்து என் கையை பிடித்து இழுத்துக் கூட்டிச் செல்ல அந்த வாடகைக் கார் புறப்பட்டு வேகமாக மருத்துவமனையை நோக்கிச் சென்றது. நானும், அப்பாவும் மற்ற உறவினர்களும் பஸ்ஸில் மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவ மனையில் ஒரே கூட்டமாக இருந்தது. வெண்ணிறச் சீருடை அணிந்திருந்த தாதியர் அங்குமிங்குமாக வெகவேகமாகச் சென்றுக்கொண்டிருந்தனர். நானும் எனது அப்பாவும் தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த அறைக்குச் சென்றோம். தாத்தாவின் மூக்கில் சுவாசத்திற்கான குழாய்கள் செருகப்பட்டிருந்தன. அவர் சமச்சீரற்ற முறையில் சுவாசித்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உடல் பயங்கரமாக குலுங்கியது. பின் அவர் தன் இருக் கைகளையும் மேலே உயர்த்தி ஏதோ பேச முயற்சித்தார். “அவர் கையில சிலுவைய குடுங்க.” என்று ஒரு மூதாட்டி பலமாகக் கத்தினார். சற்று நேரத்தில் எங்கிருந்தோ ஒரு கருநிற சிலுவை வந்து சேர்ந்தது. அதை தாத்தா கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். சற்று நேரத்தில் அவரது உடல் குலுங்குவது படிப்படியாகக் குறைந்து மூச்சுடன் நின்றுபோனது. அழுகுரல்கள் மருத்துவமனை முழுவதும் எதிரொலித்தன. அம்மாவும் மிகுந்த துயருடன் அழுதாள். அவள் அழுவதைப் பார்த்த நானும் அவளுடைய சேலையைப் பற்றிக்கொண்டு அழ ஆரம்பித்தேன். அப்போது அங்கே வந்த என் அப்பா என் கையைப் பற்றி கூட்டிக்கொண்டு போய் “இன்னும் நீ சின்னப் பிள்ள இல்ல. தயிரியமா இருக்கணும்.” என்று கையிலிருந்த பீடியை உறிஞ்சவண்ணம் கூறினார். ஆனாலும் நான் தொடர்ந்து அழுதேன்.




நான் தாத்தாவின் இறுதி சடங்கில் எல்லோருடனும் சேர்ந்து பங்கெடுத்துக்கொண்டேன். இறுதி சடங்கு நடந்த அந்த நேரத்தில் தேவாலயம் திருவிழாக் கோலத்தை இழந்து மரணகோலத்துடன் காணப்பட்டது. பீடத்தினருகில் இருந்த ஒரு மெழுகு ஸ்டாண்டில் ஏராளமான மெழுகுதிரிகள் பற்றவைக்கப்பட்டிருந்தன. தேவாலயத்தின் தரையிலும் சுவர்களிலும் நிறைய வெடிப்புகள் இருப்பதும், கூரையிலுள்ள உத்திரங்கள் உளுத்துப் போய் இருப்பதையும் அப்போதுதான் என் கண்களுக்குத் தெரியவந்தன. அந்த தேவாலயமானது திருவிழாக் கொண்டாடுவதற்கு அல்ல, இறந்தவர்களை புதைப்பதற்குதான் கட்டப்பட்டிருக்கிறது என்று எனக்கு தோன்றியது.

தாத்தாவின் சவ ஊர்வலம் குறுகலான, புதர்களும் காட்டு மரங்களும் உள்ள பாதை வழியாக சென்று கல்லறைத் தோட்டத்தை அடைந்தது. பரந்து விரிந்திருந்த கல்லறைத் தோட்டத்தில் பல்வேறு அளவுகளில் ஏராளமான கல்லறைகள் இருந்தன. கல்லறைகளுக்கிடையிலான இடத்தை எல்லாம் புதர்களும் கொடிகளும் அடைத்துக்கொண்டிருந்தன. சில கல்லறைகள் மிகவும் சிதிலமான நிலையில் காணப்பட்டன. காற்றாலும், மழையாலும் சில கல்லறைகளின் சிலுவைகள் உடைந்துப்போய் இருந்தன. என்னுடைய தாத்தாவின் கல்லறையானது பாட்டியின் கல்லறையின் அருகிலேயே தோண்டப்பட்டிருந்தது. இறுதி மரியாதை செலுத்தும் விதமாக அங்குள்ளவர்கள் தாத்தாவின் நெற்றியில் சிலுவை இட்டு முத்தம் கொடுத்தனர். என்னுடைய அப்பா தான் இழுத்துக்கொண்டிருந்த பீடியை தூர போட்டுவிட்டு சிலுவையிட்டு முத்தம் கொடுத்தார். நானும் பவ்யத்துடன் தாத்தாவின் நெற்றியில் சிலுவையிட்டு முத்தம் கொடுக்க சாவிற்கான வாசனைத் திரவியம் என் நாசியில் ஏறி அங்கேயே தங்கிவிட்டது. முத்தம் கொடுத்திருக்க கூடாது என்று எனக்குத் தோன்றியது. பின்னர் தாத்தாவின் சவப்பெட்டியானது மூடப்பட்டு கல்லறை குழியினுள் இறக்கப்பட்டது. எல்லோரும் மரியாதை நிமித்தமாக ஒரு கைப்பிடி மண்ணை கல்லறைக் குழியினுள் போட்டனர். நானும் ஒரு கைப்பிடி நிறைய மண்ணை போட்டேன். என்னுடைய அம்மாவும் மாமாவும் மீண்டும் அழ ஆரம்பித்தனர். அவர்களை பார்க்க எனக்கு பாவமாக இருந்தது. ஆனால் ஏனோ எனக்கு அழுகை வரவில்லை.

கனத்த இதயத்துடன் நாங்கள் எங்கள் ஊர் வந்து சேர்ந்தோம். வாழ்க்கை மிகவும் இறுக்கமாக மாறியது. விடுமுறை முடிந்து பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு இன்னும் சில நாட்கள் இருந்தன. எங்கள் வீட்டில் ஒரே இருண்ட அமைதி நிலவியது. அம்மா எப்போதும் துக்கம் நிறைந்தே காணப்பட்டாள். சரியாகச் சமைக்கவில்லை. கஞ்சி மட்டுமே எங்களுக்கு மூன்று வேளையும். மீன் குழம்பு, காய்கறி எதுவுமில்லை. அந்த இருண்ட அமைதியிலிருந்து வெளியேறும் விதமாக ஆற்றிற்கு சென்று குளிக்கலாமென்று எண்ணினேன். அத்தை மகள் சோபியாவுடன் சென்றால் நன்றாக இருக்கும். ஆனால் அவள் விடுமுறை காலத்தை கழிக்க உறவினரின் வீட்டுக்கு சென்றுவிட்டாள். என்ன செய்வது! நண்பன் விக்டருடன்தான் குளிக்க வேண்டுமென்றாகிவிட்டது. நல்ல பையனான அவனுடன் குளிக்க செல்வது சந்தோசமான விசயம்தான். ஆனாலும் சோபியாவுடன் குளிக்கப் போவது என்பது எனக்கு எப்போதுமே இனிமையான அனுபவமாக இருந்தது.

ஆற்றங்கரையிலுள்ள மணல் திட்டை தாண்டி மரம் செடிகொடிகள் சூழ்ந்திருந்த விக்டரின் ஓட்டு வீடு மர அழிகளால் ஆற்றங்கரையிலிருந்து பிரிக்கப்பட்டிருந்தது. விக்டரின் அம்மா கொல்லையில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்தாள். நான் இரண்டு நேரம் கூப்பிட்டும் விக்டர் சத்தம் தராததை பார்த்த அவனுடைய அம்மா, “ஏய் விக்டர்... இதோ ஜான் வந்திருக்காண்டா...?” என்று சத்தமாக கத்த, விக்டர் பின்புற வாசல் வழியாக வெளியே வந்தான். என்னைப் பார்த்ததும் அவன் சந்தோசத்துடன் சிரித்தான். அவனிடம் எப்போதுமே ஒட்டியிருக்கும் சிரிப்பு இருந்தாலும் அவன் நோய்வாய்ப்பட்டவன் போலே தோன்றினான். சொல்ல போனால் அவன் எப்போதுமே அப்படிதான் இருந்தான். அதனாலேயே நிறைய பையன்கள் அவனுடன் பழகுவதில்லை அல்லது அவர்களின் பெற்றோர் அவனிடம் பழகவிடுவதில்லை. ஆனால் அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல என் அம்மாவுக்கும்தான். நான், “குளிக்கலாமா...?” என, “இரு இதோ டவல எடுத்துட்டு வந்திர்றேன்.” என்று வீட்டுக்குள் சென்று ஒரு சிகப்பு நிற குற்றாலம் துண்டையும் ஒரு கண்ணாடி பாட்டிலையும் எடுத்துக்கொண்டு வந்தான். “மீன் பிடிக்கலமா...?” என்றான். நாங்கள் இருவரும் ஒரு கெண்டை மீனையும், பெயர் தெரியாத வேறு இரண்டு மீன்களையும் பிடித்தோம். விக்டர் என்னிடம் மீன்களை எடுத்துச் செல்லுமாறு கூறினான். நான் வேண்டாமென்றேன். ஏனென்றால் தான் துக்கத்திலிருக்கும் போது நான் சந்தோசமாக மீன்களுடன் வீட்டிற்கு செல்வதை அம்மா விரும்பமாட்டாள். “இல்ல நீயே மீன வச்சுக்க.” என்று பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் பெரிய மனிதர் போல் கூறி மீன்களை நான் விக்டரிடமே கொடுத்துவிட்டேன்.

மறுநாளும் வீட்டில் அதே சோக நிலைதான். ஆற்றிற்கு குளிக்கப் போனால் கொஞ்ச நேரமாவது சந்தோசமாயிருக்கலாம் என்று ஆற்றுக்கு போனால் ஆற்றின் இரண்டு கரைகளிலும் ஒரே ஜன கூட்டமாக இருந்தது. அந்த கூட்டத்தில் விக்டரும் நின்றுகொண்டிருந்தான். நான் விக்டர் நிற்குமிடத்திற்கு வந்து “என்ன விசயம்டா...?” என அவன் எந்த பதிலும் சொல்லாமல் ஆற்றினுள் தூரத்தில் மிதந்து வந்துகொண்டிருக்கும் ஒரு பொருளை நோக்கி கைகாட்டினான். முதலில் அது என்ன என்று பிடிகிடைக்கவில்லை. பின்னர்தான் அது அதிர்ச்சியூட்டும் அளவுக்கு பூதாகரமாக உப்பிப்போன ஒரு மனிதனின் உடல் என்று தெரிந்தது. “யாருதான் பொணத்த ஆத்துல இருந்து எடுப்பாங்க?” என்று ஒருவர் கேட்க, அருகிலிருந்த இன்னொருவர், “போலீஸ்தான் எடுக்கணும்.” என்றார். “பொணத்த எடுத்து என்ன பண்ணுவாங்க?” என்று விக்டர் என்னிடம் கேட்டான். நான் “ஒரு பெட்டில போட்டு மூடிருவாங்க.” என்றேன். அதை கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெரியவர், “பெட்டியில்ல... சவப்பெட்டி.” என்று என்னை திருத்தினார்.

பயந்துபோன சிறுவர்களாகிய நாங்கள் ஆற்றுக்கு சென்று குளிக்கத் துணியவில்லை. நாட்கள் ஒவ்வொன்றாக கடந்தன. எங்கள் பயமும் கொஞ்சம் கொஞ்சமாக போய்விட்டது. மீண்டும் ஆற்றுக்கு சென்று குளிக்க ஆரம்பித்துவிட்டோம்.

பள்ளிக்கூடம் திறப்பதற்கு முந்தின தினம் ஒரு குளிரான காலையில் குளிப்பதற்காக ஆற்றங்கரைக்கு சென்று விக்டரை கூப்பிட்டேன். அவன் வீட்டு பின்புற வாசல் வழியாகத்தான் வந்தான். “நான் குளிக்கலாமா?” என அவன், “இல்லடா, எனக்கு ஒடம்பு சரியில்ல.” என்று வருத்தத்துடன் பதிலளித்தான். அவன் முகம் வெளிறி போய் மிகவும் பலவீனத்துடன் தோன்றினான். பேசுவதற்கே கடினமாயிருந்தது அவனுக்கு. எனக்கு அவனை பார்ப்பதற்கு பாவமாயிருந்தது. “ஆனா கரையில ஒனக்கு தொணையா ஒக்காந்து இருக்கேன்.” என்றான் விக்டர். நான், “இல்ல விக்டர் நீ வீட்டுக்குப் போ. ஒடம்புக்கு ஏதாது ஆகிட போவுது.” என்றேன். அவன், “ஒண்ணும் ஆகாதுடா.” என்று ஆற்றங்கரையிலுள்ள ஒரு மேட்டுப் பகுதியில் அமர்ந்துகொள்ள நான் ஆற்றினுள் இறங்கி குளிக்க ஆரம்பித்தேன். அப்போது வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மழைத் தூரல்கள் விழ ஆரம்பித்தன. விக்டரின் அம்மா மர அழிகளின் உள்ளேயிருந்து, “ஏ விக்டர் மழடா. வீட்டுக்குள்ள வா.” என்று கத்தினாள். விக்டர் வீட்டுக்கு போக எழும் சமயம் விக்டரின் அம்மா ஆற்றங்கரைக்கு வந்து நான் இன்னும் தண்ணீருனுள் இருப்பதை பார்த்து, “ஜான் கரையேறி வீட்டுக்குப் போ. மழ வர்றது தெரியலியா ஒனக்கு.” என்று சற்று அதட்டலாக சொன்னாள். நான் கரையேறி டவலால் உடம்பை துடைத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன். விக்டர் அம்மாவுடன் வீட்டுக்கு சென்றான். அவன் இருமும் சத்தம் அவன் வீட்டினுள்ளிருந்து கேட்டது.




மறுநாள் பள்ளிக்கூடம் திறந்தது. எல்லோரும் நன்றாக வெளுக்கப்பட்ட ஆடைகளை அணிந்துகொண்டு குதூகலத்துடன் பள்ளிக்கூடம் சென்றோம். எனக்கு இரட்டிப்பு சந்தோசம். ஏனென்றால் என் அத்தை மகள் சோபியா விடுமுறையை உறவினர் வீட்டில் கழித்துவிட்டு திரும்பியிருந்தாள். நான் அவளுடன்தான் பள்ளிக்குச் சென்றேன். அதனால் அன்று விக்டர் பள்ளிக்கூடம் வராததை கூட நான் கவனிக்கவில்லை. பள்ளிக்கூடம் சென்ற பிறகு “என்னடா விக்டர் இன்னைக்கு பள்ளிகொடத்துக்கு வரலியாடா?” என்று எட்வின் கேட்ட பின்னர்தான் விக்டர் பள்ளிக்கு வரவில்லை என்ற விசயம் எனக்குத் தெரிந்தது. நான் வழியில் அவனை கூப்பிட்டிருக்க வேண்டும். அத்தைப் பெண் இருந்ததால் கூப்பிடத் தோணவில்லை. விக்டர் வகுப்பில் இல்லாமல் இருந்தது ஒரு மாதிரியிருந்தது. அத்தைப் பெண் என் வகுப்பில் இருந்தால் அந்த குறை தெரியாதுதான். ஆனால் அவள் என்னைவிட ஒரு வயது சிறியவள். அதனால் அவள் எனக்கு கீழ் வகுப்பில் படித்தாள்.

முன் தினம் விக்டருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது ஞாபகம் வந்தது. அவனை அழையாமல் வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டிற்கு சென்று உடைகளை மாற்றிக்கொண்டு நேராக விக்டரின் வீட்டுக்குச் சென்றேன். அவன் படுக்கையில் படுத்திருந்தான். நான் வருவதை பார்த்ததும் படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்து உட்கார்ந்தவண்ணம் பலவீனமாக சிரித்தான். நான் அவனிடம், “ஏன் பள்ளிகொடத்துக்கு வரல? ஒடம்புக்கு ரொம்ப முடியலியா?” என, அப்போது அங்கு வந்த அவனுடைய அம்மா, “அவனுக்கு காய்ச்சலும் சளியும் இருக்குப்பா.” என்றார். நான் “நீ படுத்துக்கோடா.” என்று அவனுடைய தோளை பிடித்து அழுத்த அவன் மீண்டும் படுக்கையில் படுத்துக்கொண்டான். நோஞ்சானென்றாலும் விக்டர் நன்றாக படிக்கக்கூடியவன். அவனுக்கு பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட பாடங்களைப் பற்றி கேட்காமல் இருப்புக்கொள்ளவில்லை. நானும் கூட நல்லா படிக்கக்கூடியவன்தான். அதனால் நான் அன்று பள்ளியில் நடத்தப்பட்ட பாடங்களை பற்றி விக்டரிடம் விவரித்தேன். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே திண்ணையில் உட்கார்ந்திருந்த விக்டர் அம்மாவிடம் “எங்க ஜான் வந்தானா?” என்று என் அம்மா கேட்பது கேட்டது. விக்டரின் அம்மா “ஆமா உள்ளதான் இருக்கான். தேடுனீங்களோ?” என, அம்மா “இல்ல இங்கதா வந்திருப்பான்னு நெனச்சேன். விக்டருக்கு இப்ப எப்புடி இருக்கு?” இருவரும் உள்ளே வந்தனர். “இப்ப கொஞ்சம் காய்ச்சல் விட்டிருக்கு. நாளைக்கு சரியாயிரும்னு டாக்டர் சொல்லியிருக்காரு.” என்றாள் விக்டரின் அம்மா. அம்மா விக்டரின் நெற்றியில் கைவத்து பார்த்துவிட்டு, “ஆமா இப்ப காய்ச்சல் அவ்வளவா இல்ல.” என்றவண்னம் அவனது கையை பிடித்து அழுத்தினாள். விக்டர் அம்மாவை பார்த்து மெலிதாக சிரித்தான்.

மறுநாள் வானம் முற்றாக வெளுக்காக காலையில் படுக்கையில் கண்களை மூடி படுத்திருக்க வெளியில் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் நடமாடும் சத்தம் வழக்கத்திற்கு அதிகமாக கேட்டது. அவர்கள் தங்களுக்குள் கிசு கிசுத்தபடியே பேசிக்கொண்டனர். தேவாலயத்திலிருந்து எழுந்த சாவு மணி என்னுள் கலக்கத்தை ஏற்படுத்த படுக்கையிலிருந்து எழுந்து அம்மாவிடம், “ஏம்மா வெளிய ஒரே சல சலப்பாயிருக்கு?” என அவள் என் நெற்றியில் முத்தமிட்டு, “ஒண்ணுமில்ல. படுத்துக்கோ.” என்னை மீண்டும் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியே சென்றாள். அப்போது ஒரு பெண், “யாரு இறந்தது?” என்று கேட்க, தெரசா பாட்டி, “சைமனோட பையன் விக்டரு...” என பதில் கூற நான் படுக்கையிலிருந்து அலறியடித்துக்கொண்டு எழுந்து அழுதவண்ணம் விக்டரின் வீட்டை நோக்கி ஓடினேன்.

விக்டர் நான் அவனை முந்தைய தினம் பார்த்த அதே கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தான். என்னைப் பார்த்ததும் விக்டரின் அம்மா, “டே... விக்டர் ஒன்ன ஜான் பாக்க வந்திருக்காண்டா...?” என்று கதற நான் ஓவென்று அழ ஆரம்பித்தேன். நான் சென்ற சற்று நேரத்தில் சிஸ்டர் ரீட்டா தேவாலயப் பாடல் குழுவினருடன் அங்கு வந்தார். அவர்களுடன் சோபியாவும் வந்திருந்தாள். என் அழுகையை பார்த்த அவளும் தேவாலயத்தில் பாடலை சேர்ந்திசைப்பது போல் சேர்ந்து அழுதாள். பாடல் குழுவினருடன் வந்திருந்த சிஸ்டர் ரீட்டாவை பார்த்த விக்டரின் அம்மா, “என் மோனே சிஸ்டர் ஒன்ன பாக்க வந்திருக்காங்கடா... எழுந்திரிடா...” என்று அழ, சிஸ்டர் ரீட்டா “அழாதீங்கம்மா. விக்டர் நமக்கு முன்னாடியே மோட்சத்துக்கு போயிட்டான். அதுக்கு நாம சந்தோசம்தான் படணும்.” என்றார். விக்டரின் அம்மா, “எம்புள்ள என்னமா கோவில்ல பாடுவான். இனி அவன் பாடுறத எப்ப கேப்பேன்.” என்று அரற்ற ஆரம்பித்தார். அதைக் கேட்ட எட்வின் சிரித்துவிட்டான். எனக்கு விக்டர் மோட்சத்துக்கு போவான் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இருக்கவில்லை. ஆனால் அவனுடைய அம்மா விக்டர் நன்றாகப் பாடுவான் என்று பொய் சொன்னதுதான் பிடிக்கவில்லை.





விக்டர் மோட்சத்துக்கு போனது நல்ல விசயம்தான் என்றாலும் அவன் இல்லாத வகுப்பறை துயரத்தை அளிப்பதாகவே இருந்தது. ஆனாலும் காலம் யாருக்காகவும் நில்லாது மாற, பருவநிலைகள் உலகத்தை தொடர்ந்து மாற்றி காண்பித்தன. வசந்தத்தில் இருள் உலகு பச்சையாய் மிளிர உற்சாகம் தலை தூக்கியது. விக்டரின் மரணம் குறித்த துயர நினைவு அவனுடனான எனக்குள்ள உறவின் நினைவுகளாக மாற நானும் மற்றவர்களைப் போல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினேன். இப்போது விக்டரின் இடத்தில் எட்வின் இருந்தான். நாங்கள் இருவரும் தோற்றத்தில் கிட்டதட்ட ஒரே போலத்தான் இருந்தோம். அவன் என்னைவிட சற்று குள்ளம். அவ்வளவுதான். எட்வின் என்னை போலவே இருப்பதால் அம்மாவுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும். நாளடைவில் அவன் எங்கள் வீட்டில் ஒருவனாகவே மாறிவிட்டான். பள்ளியிலும் நானும் எட்வினும் எப்போதும் சேர்ந்தே இருந்தோம்.

ஒருநாள் வரலாறு பாடம் நடத்தும் சிஸ்டர் ஹெலன் எங்கள் எல்லோரையும் பள்ளித் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கறிப்பலா மரங்களின் நிழலில் உட்கார்ந்து படிக்கச்சொல்ல, நாங்கள் அகன்ற கறிப்பலா இலைகளை தரையில் விரித்து அதன் மேல் உட்கார்ந்துகொண்டு படிக்க ஆரம்பித்தோம். அல்லது படிப்பது போல் நடிக்க ஆரம்பித்தோம். எட்வின் படிக்கவில்லை. நானும் படிக்கவில்லைதான். ஆனால் அவன் எப்போதுமே படிப்பதில்லை. அவன் ஒரு நோட்டில் கலர் பேனாக்களால் படங்கள் வரைந்துகொண்டிருந்தான். அவன் வரைந்த படம் ஒன்றினை எனக்கு காண்பித்தான். அது பெரிய மீசையை வைத்திருக்கும் ஒரு கிழவனின் கேலிச் சித்திரம். நான் “அழகா இருக்குது.” என்றேன். அவன் உற்சாகமாகிவிட்டான். மீண்டும் வேகமாக ஒரு படத்தை வரைந்து எனக்கு காண்பித்து, “இது எப்படியிருக்கு?” என்றான். அது ஒரு கறுப்பு நிற சவப்பெட்டியின் சித்திரம். அப்படம் எனக்கு விக்டரின் மரணத்தை ஞாபகபடுத்துவதாக இருந்தது. “நல்லாயில்ல. இந்த மாதிரி வரையாதே.” என்றேன். அவன் முகம் வாடிப் போனது. என்னை திருப்திப்படுத்துவதற்காக மீண்டும் அவன் எதையோ வரைய ஆரம்பித்தான். அந்த சமயத்தில் மஞ்சள் வெயிலினூடாகவே மழை லேசாக தூறல் போட சிஸ்டர் எல்லோரையும் வகுப்பறைக்குப் போகச் சொன்னார். நாங்கள் அனைவரும் கூச்சலிட்டவாறே வகுப்பறைக்குள் நுழைந்தோம்.

வகுப்பறையினுள் நாங்கள் இட்ட கூச்சலையும் தாண்டி எங்கள் வகுப்பறையை ஒட்டியிருக்கும் தெருவிலிருந்து பெண்களின் அழுகுரல் கேட்டது. நாங்கள் தெருவின் பக்கம் திறந்திருக்கும் ஜன்னல் வழியாக என்ன நடக்கிறது என்று வெளியில் எட்டிப் பார்த்தோம். அங்கு மாட்டு வண்டிக்காரன் ஆவ்ரானின் தங்கையும், அம்மாவும் நெஞ்சிலடித்து கதறியழுத வண்ணமே ஒரு ஆம்பூலன்ஸ் வண்டியின் பின்னால் ஓடினர். என்ன விசயம் என்று எங்களுக்கு தெரியவில்லை. அப்போது சிஸ்டர் ஹெலன் தெரு பக்கமிருக்கும் கதவை திறந்துகொண்டு வெளியே போய் அங்கு கூடி நின்றவர்களிடம் என்ன நடந்ததென்று விசாரித்தார். பின்னர் வகுப்பறைக்குள் வந்த அவர், “எல்லோரும் அமைதியாயிருங்க. ஒரு துக்கமான விசயம். வண்டியோட்டும் போது வண்டியிலயிருந்து கீழே விழுந்து வண்டி சக்கரம் ஏறி அப்ரகாம்னு ஒருத்தர் இறந்திட்டார்.” என, நான் அருகிலிருந்த எட்வினிடம், “டேய் ஆவ்ரான்டா. சிஸ்டர் அவனோட பேர அப்ரகாம்னு தப்பா சொல்றாங்க பாரு.” என்றேன். அதற்கு எட்வின், “சிஸ்டர் வேற ஊரு காரங்கடா. அதனாலதான் அவங்களுக்கு பேரு சரியா தெரியல.” என்றான். சிஸ்டர் ஹெலன் தொடர்ந்து “எல்லோரும் எழுந்து கண்ண மூடி அவரோட ஆன்மா மோட்சத்தை அடையறதுக்கு கடவுள்கிட்ட வேண்டுங்க.” என்றார். எல்லோரும் எழுந்து நின்று கண்களை மூடிக்கொண்டு ஜெபம் செய்தனர். அல்லது சிஸ்டருக்குப் பயந்து அப்படி நடித்தனர். எட்வின் கூட கண்களை மூடி ஏதோ முணு முணுத்தான். தேவாலயத்தில் பீடச் சிறுவனாக இருக்கிறானல்லவா அவன்! தன்னை பக்திமான் என்று காட்டிக்கொள்கிறானாம். நான் ஜெபம் செய்யவில்லை. ஏனென்றால் எனக்குத் தெரியும் ஆவ்ரான் நிச்சயமாக நரகத்துக்குத்தான் போவான் என்று. சிறுவர்கள் ஏதாவது தப்பு செய்தால் பெற்றோர் ஆவ்ரானிடம் அவர்களை பிடித்துக்கொண்டு போக சொல்ல, அவன் அவர்களை தூக்கிக்கொண்டு செல்வதற்கு ஒரு பெரிய கோணிப்பையோடு வந்துவிடுவான். அப்படிப்பட்டவன் எப்படி நரகத்திற்கு போகாமல் மோட்சத்திற்குப் போகமுடியும்?

எனக்கு கொடூரமான ஆவ்ரான் செத்த பிறகு எப்படியிருப்பான் என்று பார்க்க தோன்றியது. பள்ளிக்கூடம் முடிந்ததும் அவனை பார்ப்பதற்காக அவனுடைய வீட்டிற்கு சென்றேன். கூடவே துணைக்கு சோபியாவையும் கூப்பிட்டேன். அவள் ஒரு பயந்தாங்கொள்ளி. வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். ஆவ்ரான் ஒரு அகன்ற பெஞ்சின் மீதிருந்த சவப்பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்தான். அவனுடைய முகம் அவன் உயிரோடு இருக்கும் போது இருந்ததை விட அதிகமாக இருண்டு போய் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. கெட்டவனான அவன் இறப்பிலும் ஏதாவது செய்துவிடுவானோ என்ற பயம் என்னைத் தொற்றிக்கொண்டது. வெளியே ஓடி வந்துவிட்டேன்.

எனக்கு பிடிக்காவிட்டாலும் தேவாலயத்தின் பாடல் குழு உறுப்பினர் என்ற முறையில் ஆவ்ரானின் இறுதியடக்க திருப்பலியில் பங்கெடுக்க வேண்டியதாயிற்று. சோபியா வரவேயில்லை. நான் ஹார்மோனியம் மாஸ்டர் பால் ஜஸ்டினுக்கு பாடல் நோட்டு புத்தகத்தைச் சரித்துப் பிடித்தவண்ணம் பாடல் குழுவினர் எல்லோருடனும் சேர்ந்து இறந்தோருக்கான பாடலை பாடினேன். பாடல் மிகவும் உருக்கமாக இருந்தது. பாடலோடு சேர்ந்து ஹார்மோனியமும் உருக்கமாய் இசைத்தது. அந்த இசை என்னை மிகவும் ஆட்கொள்ள நான் ஒரு விரலால் ஹார்மோனியத்தின் கட்டை ஒன்றை அழுத்தினேன். அது எழுப்பும் இசை எனக்கு ஆனந்தமாயிருக்க மீண்டும் அதே கட்டையை அழுத்தினேன். என்னாலும் கூட ஹார்மோனியத்தை இசைக்க முடியும் என்று தோன்றியது. சந்தோசத்தில் நான் அந்த கட்டையை அப்படியே அழுத்தி பிடித்து வைக்க, அந்த கட்டை தொடர்ந்து பாடலுக்கு எதிரான சுரத்தில் சப்தம் எழுப்ப ஹார்மோனியம் மாஸ்டர் தன்னுடைய மோதிரம் அணிந்த விரலால் என்னுடைய தலையில் பலமாக கொட்டினார். அது தலையில் சம்மட்டிக்கொண்டு அடித்தது போல் வலித்தது. “இவனெல்லாம் சாகமாட்டானா...?” என்று மனதிற்குள் அவரைச் சபித்தேன். அவரும் இறந்து போனார்.

ஹார்மோனியம் மாஸ்டர் மீது எனக்கு பயங்கரக் கோபம் இருந்தது உண்மைதான். ஆனால் நான் உண்மையில் அவர் சாகவேண்டும் என்று நினைக்கவேயில்லை. அதனால் என் சாபத்தால் அவர் இறந்துபோனது எனக்கு பெரும் துயரத்தை கொடுத்தது. அவருடைய வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய பிணத்தை பார்த்ததும் என்னால் தாங்கிகொள்ள முடியவில்லை. கதறியழுதுவிட்டேன். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஊரே அழுதது. ஆனால் இறுதிச் சடங்கை நடத்துவதற்கு வந்த குருவானவர் மட்டும் அழவேயில்லை. நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன் அவருடைய கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை. அங்கு மட்டுமல்ல எந்த சாவிலுமே அவர் அழுததாகவோ, சோகமாக இருந்ததாகவோ எனக்கு ஞாபகமில்லை. அவர் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காகவே நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் ஊரிலுள்ள எல்லோரையும் அடக்கம் செய்து முடிக்கும் வரை ஓயமாட்டார் என்றும் தோன்றியது.

ஒருநாள் அந்த குருவானவரும் இறந்துபோனார். அவருடைய உடல் தேவாலயத்தின் முன்னாலுள்ள மைதானத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. சொல்லி வைத்தாற் போல் ஊர்மக்கள் யாரும் அவருக்காக கண்ணீர் விடவில்லை. இரக்கமற்றவருக்காக மக்கள் கண்ணீர் சிந்தத் தயாரில்லை போலும். அவருடைய சாவைக் கொண்டாடுவது போல் அவருக்கான இறுதித் திருப்பலியானது மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்டது.

ஊர் மக்களை அடக்கம் செய்யும் பணியில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக மறைமாவட்ட தலைமை உடனே ஒரு குருவானவரை எங்கள் ஊருக்கு நியமித்தது. குருவானவரின் முதல் பலிக்கடா யாராக இருக்கும் என்று பயந்திருந்த எனக்கு என்னுடைய பெரியப்பாதான் அந்த முதல் பலிகடா என்பது அதிர்ச்சியாக இருந்தது. இறுதிச் சடங்கு ஜெபத்திற்காக வந்திருந்த புதிய குருவானவர் யாருக்கும் புரியாத லத்தீன் மொழியில் இறந்தோருக்கான பாடலை எந்த உணர்ச்சிகளுமற்று பாட அவருடன் பீடச் சிறுவனாக வந்திருந்த எட்வின் தூபப் பேழையை மிகவும் சிலாகிப்புடன் ஊஞ்சலாட்டிக்கொண்டிருந்தான். குருவானவருடன் சேர்ந்து அவனுக்கும் உணர்ச்சிகள் அற்றுவிட்டது போலும்.

பெரியப்பா உயிரோடு இருக்கும்வரையில் சதா சிகரெட் புகைத்துக்கொண்டு புகையை மூக்கு வழியாக வெளிடுவார். தன்னால் கண்கள் வழியாக கூட புகையை வெளியிட முடியும் என்று அவர் எங்களிடம் கூறுவதுண்டு. ஆனால் அதை அவர் ஒருமுறை கூடச் செய்து காட்டவில்லை. இப்போது அவரின் மூக்குத் துவாரங்கள் பஞ்சினால் அடைக்கப் பட்டிருக்க லேசாக திறந்திருக்கும் கண்கள் வழியாக புகைவருவது போன்ற ஒரு தோற்றத்தை அவர் உடலை சுற்றி ஏற்றப்பட்டிருக்கும் சாம்பிராணித் திரிகளிலிருந்து வெளிப்படும் புகை ஏற்படுத்தியது. ஆனால் அந்த புகையில் சிகரெட் வாசனையில்லை. சாம்பிராணியின் துக்க வாசனையே இருந்தது. எனக்கு அழுகையாக வந்தது. ஆனால் சோபியா வளர்ந்த பெண் போல் என் கைகளை அழுத்தமாக பிடித்துக்கொண்டு என்னை தேற்றினாள்.

காலம் எப்போதும் போல் தொடர் இயக்கத்திலிருந்தது. காலத்தில் நாங்களும் மாறியிருந்தோம். வளர்ந்திருந்தோம். மேற்படிப்புக்காக முயற்சி செய்தோம். படிப்பில் பொதுவாக என்னிலிருந்து பின் தங்கியிருந்த எட்வினுக்கு முதலிலேயே மேற்படிப்பிற்கு இடம் கிடைக்க அவன் வெளியூர் சென்றுவிட்டான். அது எனக்கு சற்று பொறாமையாகக் கூட இருந்தது. நான் தொடர்ந்து மேற்படிப்புக்காக முயற்சி செய்துகொண்டிருந்தேன். ஒரு வழியாக எனக்கும் மேற்படிப்பு படிப்பதற்கு இடம் கிடைத்தது. அத்தை மகளிடமிருந்து தூரமாக போய் படிப்பது எனக்கு கடினமாக இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை. அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் நன்றாக படித்து நல்ல வேலையில் சேர்ந்தாக வேண்டும் என்ற நிலை எனக்கு.

கல்லூரியில் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகியிருக்காது அம்மா நான் தங்கியிருந்த விடுதிக்குத் தொலைபேசியில் அழைத்து என்னை உடனே பார்க்க வேண்டுமென்றாள். சேர்ந்த உடனேயே விடுப்பு எடுப்பது சரியல்ல என்று அவளிடம் எவ்வளவு சொல்லியும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை உடனே பார்த்தாக வேண்டும் என்று கூறி அழ ஆரம்பித்துவிட்டாள். வேறு வழியில்லாமல் நான் உடனே கிளம்ப வேண்டியதாயிற்று. அவசரமாக கிளம்பியதால் சோபியாவுக்குக் கூட இரண்டு ஜோடி வளையல்களைத் தவிர வேறு எதுவும் வாங்க முடியவில்லை.

வீட்டிற்கு வந்ததும் வராததுமாக அம்மா அழுதவண்ணம் எட்வின் அவன் தங்கியிருந்த விடுதியின் அருகில் மின் கம்பி அறுந்து விழுந்து இறந்துவிட்டதாக சொன்னாள். கையிலிருந்த கைப்பையை தூக்கி வீசியதுதான் எனக்கு ஞாபகம். எட்வினின் வீட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தேனென்று எனக்கே தெரியவில்லை. நான் அவன் வீட்டை அடைந்த போது அவனுடைய உடல் இன்னும் வீடு வந்து சேரவேயில்லை. பிணப் பரிசோதனைக்காக அவனுடைய உடல் அனுப்பப்பட்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டார்கள். எட்வினுடைய உடல் ஆம்புலன்ஸில் வீட்டிற்கு வந்து சேருவதற்கு முன்பாக அவனுடைய அம்மா மூர்ச்சையாகி விழுந்துவிட்டாள். அவனுடைய தங்கை தரையில் உருண்டு அழுதுகொண்டிருந்தாள். அவனுடைய அப்பா விட்டுச் சுவரில் கல்லாக சாய்ந்திருந்தார்.

ஆம்புலன்ஸ் நின்றதும் எட்வின் இறங்கி நடந்துதான் வீட்டுக்கு வருவான் எனும் இனம் புரியா அல்லது அசட்டு நம்பிக்கை எனக்குள்ளிருந்தது. ஆனால் அவன் சவப்பெட்டியினுள் வைக்கப்பட்டுதான் கொண்டுவரப்பட்டிருந்தான். அவனுடைய உடலை நான் நன்றாக உற்றுப் பார்த்தேன். என் மனம் துக்கம் மகிழ்ச்சி எதுவுமற்றதாக மரத்து போய்விட்டது. உணர்ச்சி எனக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் என்னுள் எழ மீண்டும் அவனை உற்றுப் பார்த்தேன். அவன் சாம்பலாக அல்ல தசையாலானவனாகவே இருந்தான். என்னை பார்த்து அவன் தன்னுடன் அழைப்பது போலிருந்தது. எனக்கு அவனுடன் போகக் கூடாதென்று இல்லை. ஆனால் நான் போகமுடியாது. “அத்தை மகள் என்னையே நினைத்துக்கொண்டிருக்கிறாள். நான் அவளுக்காக வாழ்ந்தாக வேண்டும்.” என்று அவனிடம் மௌனமாக கூறினேன். அவன் அதை ஏற்றுக்கொண்டது போல் கண்களை மூடியிருந்தான்.

நான் கண்களைத் திறந்தாலும், மூடினாலும், எட்வினின் நினைவு திரும்பத் திரும்ப வந்து துன்பத்தை கொடுக்க, அதிலிருந்து விடுபடும் எண்ணத்துடன் அத்தை மகள் சோபியாவைச் சந்திக்க அவள் வீட்டிற்கு சென்றேன். அவளையும் எட்வினின் இறப்பு பாதித்திருந்தது. நாங்கள் இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தோம். பின் மௌன துயரத்திலிருந்து வலிந்து வெளியேறி நான் அத்தை மகளுக்காக வாங்கி வந்திருந்த இரண்டு ஜோடி வளையல்களையும் அவளிடம் கொடுத்தேன். அவள் அவற்றை “அழாகாயிருக்கு.” என்றவண்ணம் வாங்கிக் கைகளில் போட்டுக்கொண்டாள். உண்மையிலேயே அவள் கைகளில் அந்த வளையல்கள் அழகாக இருந்தது. “ரொம்ப அழகாயிருக்கு.” என்று அவள் கைகளைப் பார்த்தவண்ணம் கூறினேன். அவள் புன்னகையுடன் உள்ளறைக்கு சென்று மடித்து வைத்திருந்த ஒரு கடிதத்தை எடுத்து வந்தாள். “ஒனக்கு அனுப்புறதுக்குனு இந்த கடிதத்த எழுதி வச்சிருந்தேன்.” என்றவண்ணம் அந்த கடிதத்தை என் கையில் கொடுத்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ, “நீதான் நேர்ல வந்துட்டியே அப்புறம் எதுக்கு கடிதம்.” என்று என் கைகளிலிருந்து கடிதத்தைத் திருப்பி பிடுங்கிவிட்டாள். நான் அவளை சந்தோசம் கலந்த புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் அர்த்த புஷ்டியுடன் என்னை பார்த்து “ஒன்னோட காலேஜ்ல நல்ல அழகான பொண்ணுக எல்லாம் இருப்பாங்களே...” என்று கேட்டாள். அதைக் கேட்ட நான், “அடுத்து நீ என்ன கேக்க போறன்னுத் தெரியும். என்னோட உலகத்தில் உன் தவிர வேறு எந்தப் பெண்ணும் கிடையாது.” என்று உறுதியாகக் கூறினேன். “ஏனாம்?” “ஏன்னா நான் உன்னை முழு மனசோட காதலிக்கிறேன்.” என்றேன். அவள் காதல் புன்னகை பூத்த கண்களால் என்னை பார்த்தாள். நான், “நீ என்ன காதலிக்கிறீயா?” என, அவள் பதில் சொல்லாமல் வேகமாக வந்து என் உதடுகள் மேல் அவள் உதடுகளை பதித்து அழுத்தமாக முத்தம் கொடுத்தாள். சுற்றியுள்ள உலகமெல்லாம் மங்கி நாங்கள் மட்டும் எங்கள் காதலுடன் எஞ்சியிருந்தோம். நேரம் சென்று அத்தையும், மாமாவும் வீட்டுக்குள் நுழையும் சத்தம் கேட்டு நாங்கள் எங்களிடமிருந்து எங்களை விடுவித்து மீண்டும் உலகினுள் வந்தோம்.

இந்த பிரபஞ்சத்தில் எதுவும் எதற்காகவும் நின்றுபோவதில்லை. நாம் இருந்தாலும் அது இயங்கும். இல்லாவிட்டாலும் இயங்கும். உள்ளத்தினுள் எட்வின் இறந்த துயரிருந்தாலும் படிப்பைத் தொடருவதற்காக நான் மீண்டும் வெளியூருக்கு பயணம் புறப்பட்டேன். அம்மாவுக்கும் சோபியாவிற்கும் நான் படிப்பதற்காக வெளியூர் செல்வது கொஞ்சமும் பிடிக்கவில்லையென்றாலும் எனக்கு வேறு வழியிருக்கவில்லை. ஆனால் கல்லூரியில் எனக்கு சதா சோபியாவின் நினைவாகவே இருந்தது. பேசாமல் படிப்பை நிறுத்திவிட்டு போய்விடலாமோ என்று கூட சில நேரங்களில் தோன்றுவதுண்டு. எப்போது பரீட்சை முடியும், கோடை விடுமுறை வரும் என்ற ஏக்கத்துடன் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தேன்.



விடுமுறை வந்ததும் தாமதம் சோபியாவிற்கு அழகான வெள்ளைநிறத்தில் தையைல் வேலைபாடுகளுடன் கூடிய நீள் பாவாடையும் ப்ளௌசும், அம்மாவிற்கு இரண்டு சேலைகளும் வாங்கிக்கொண்டு அன்று இரவே வீட்டுக்குப் புறப்பட்டேன். வீட்டிற்கு வந்த நான் காலையிலேயே எழுந்து குளித்து சோபியாவை பார்க்க செல்வதற்கு தயாரானேன். காலையில் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அம்மா, “சோபியாவிற்கு ஒடம்பு சரியில்லாம கொஞ்ச நாள் ஆஸ்பத்திரில இருந்தாள். மூணு நாளைக்கு முன்னாடிதான் ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்குப் போக அனுமதிச்சாங்க.” என்று கூறினாள். எனக்கு கோபமாக வந்தது. “ஏன் இத எல்லாம் எங்கிட்ட சொல்லல.” என்று ஆத்திரத்துடன் அம்மாவை பார்த்து கத்தினேன். அம்மா, “ஒனக்கு பரீட்சை நேரம். தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவியேன்னுதான் சொல்லல.” என, “இத விட எல்லாம் பரீட்சையா முக்கியம்.” என்று கோபத்துடன் எழுந்து கையை கழுவிக்கொண்டு உடனே சோபியாவின் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றேன்.

பார்ப்பதற்கு சோபியா மிகவும் இளைத்துப்போய் பலவீனமாக காணப்பட்டாள். அதைஒப் பார்த்ததும் என் உள்ளம் நொறுங்கிப் போனது. ஆனால் அவளோ என்னை பார்த்ததும், “ஏன் ஜான் இப்படி இருக்கே? ஒழுங்கா சாப்பிடமாட்டியா?” என்று அப்பாவித்தனமாக காதல் கனிந்த வார்த்தைகளில் கேட்டாள். நான், “ஏன்? நான் நல்லாதான் இருக்கேன். நீதான் ரொம்ப பலவீனமாயிருக்க. இப்ப ஒடம்புக்கு எப்படியிருக்கு?” என்று கேட்க அவள், “எனக்கு ஒண்ணுமேயில்ல. நான் நல்லாத்தான் இருக்கேன்.” என்றாள். நான் அவளுக்காக வாங்கி வந்த உடைகளை அவளிடம் கொடுத்து, “எப்படி இருக்குதுன்னு பாரு?” என்றேன். அவள் அதை வாங்கி பிரித்து பார்த்துவிட்டு, “ரொம்ப நல்லாயிருக்கு. இப்ப போட்டு காட்டவா” என்று கேட்டாள். நான் ‘ஆம்’ என்று தலையாட்ட அவள் போய் நான் வாங்கி வந்த பாவாடையையும் ப்ளௌசையும் அணிந்துகொண்டு வந்தாள். அந்த ஆடையில் அவள் அவ்வளவு அழகாகத் தெரிந்தாள். “தேவதை மாதிரி இருக்கே.” என்றேன். அவள் வெட்கம் கலந்த பார்வையுடன் என்னை பார்த்து புன்னகைத்தாள். பின்னர் அருகில் வந்து உட்கார்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போதுதான் நான் அவளை கூர்ந்து கவனித்தேன். அவள் மிகவும் களைப்புடனும், பலவீனத்துடனும் காணப்பட்டாள். என் கண்கள் குளமாகிவிட்டன. நான் மிகவும் பிரயத்தனப்பட்டு என்னுடைய அழுகையைக் கட்டுப்படுத்த முயற்சித்தேன். அதைப் புரிந்துகொண்ட அவள் என் கைகளை பிடித்துக்கொண்டு, “எனக்கு ஒண்ணுமில்ல. நான் நல்லாயிருக்கேன்.” என்றாள். அதற்கு மேலும் அங்கு இருந்தால் கதறி அழுதுவிடுவேனென்று தோன்ற அவளிடம் விடைபெற்றுக்கொண்டு நான் வெளியேறினேன். வெளியில் வரவும் மாமா வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது. அவர் என்னைப் பார்த்து, “நீ எப்ப வந்தே.?” என்று கேட்டார். காலையிலேயே அவர் மது அருந்திவிட்டு வந்திருந்தார். எனக்கு அவர் மேலே கோபம் கோபமாக வந்தது. அதனால் அவருக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மெதுவாக என் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


மறுநாள் காலையில் எழுந்து வீட்டு மாடிக்கு செல்ல, சூரியன் தூரே கிழக்கிலுள்ள மலைகளின் பின்னாலிருந்து எழுந்து தன்னுடைய மஞ்சள் கதிர்களை வெளியெங்கும் பரப்பியது. கொக்குகள் ஆகாயத்தில் கூட்டமாகப் பறந்து செல்ல மரங்கொத்தி பறவைகள் தங்கள் பணியை காலையிலேயே ஆரம்பித்திருந்தன. காலைத் தென்றலில் மா மற்றும் பலா மர இலைகள் லேசாக அசைந்துகொண்டிருந்தன. மனிதனும் இயந்திரங்களும் ஒரே போல் இயங்கும் நகரத்தில் எவ்வளவு கூட்டமும், கூச்சலும் இருந்தாலும் நான் தனிமையிலேயே இருந்தேன். இங்கே நான் தனியனாக இருந்தாலும் உயிருள்ள உலகத்தின் ஒரு பகுதியாக இருப்பது போல் உணரமுடிந்தது. அப்போது என்னுடைய குதூகலமான மனநிலையை குலைக்கும் வண்ணம் அம்மா கீழிருந்து கத்தி கூப்பிடுவது கேட்க, நான் அவசரமாக கீழிறங்கி சென்றேன். அம்மா என்னிடம், “சோபியாவுக்கு திடீர்னு ரொம்ப அதிகமாருக்காம். ஒங்கிட்ட ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு கார் பிடிச்சிட்டு வர சொல்லி பக்கத்து வீட்டு பையனை அனுப்பியிருக்காங்க. நீ வேகமா போயி கார் பிடிச்சிட்டு வந்திரு. நான் நேரா வீட்டுக்குப் போய் எப்படியிருக்குதுன்னு பார்க்கிறேன்.” என்றாள். நான் பைத்தியம் பிடித்தவன் போல் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக வாடகைக் கார்கள் நிற்கும் வெள்ளிச்சந்தைக்கு சந்திப்புக்குச் சென்றேன். அங்கு ஒரே ஒரு கார் மட்டும்தான் நின்றுகொண்டிருந்தது. அந்த கார் டிரைவர் வெற்றிலை மென்றுகொண்டு நிதானமாக காரை ஸ்டார்ட் செய்ய அது ஸ்டார்ட் ஆகாமல் போக நான் வண்டியை பின்னாலிருந்து தள்ளினேன். ஒரு வழியாக கார் ஸ்டார்ட் ஆகி புறப்பட்டு சென்றது. நான் காரைச் சைக்கிளில் பின் தொடர்ந்தேன்.

நான் அத்தையின் வீட்டை அடைந்த போது வாடகை கார் புறப்படாமல் வீட்டு முன்னாலேயே நின்றுகொண்டிருந்தது. ஊர் மக்கள் ஒவ்வொருவராக அத்தையின் வீட்டு முற்றத்தில் குழும ஆரம்பித்தனர். என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. வீட்டினுள்ளிருந்து அழுகைச் சத்தம் பலமாக கேட்டது. நான் வீட்டிற்கு அருகில் போகத் துணியவில்லை. என் புலனறிவை எல்லாம் நிறுத்திவிட்டு வெளியுலகின் துயரம் என்னைத் தாக்காதவாறு பார்த்துக்கொள்ள எத்தனித்தேன். முடியவில்லை. முன் தினம் நான் சோபியாவைப் பார்த்த கணங்களோடு காலத்தின் இயக்கத்தை நிறுத்தி அந்த சந்தோசத்தோடு காலத்தில் என் நினைவை முடித்துக்கொள்ளவும் முயற்சித்தேன். முடியவே இல்லை. என்னையறியாமல் வீடு என்னருகில் நகர்ந்து வர வெளியிலிருந்த வண்ணமே சோபியாவின் முகத்தை பார்த்தேன். அவளது முகம் தேவதையைப் போல பிரகாசமாக இருந்தது. அவள் நான் வாங்கிகொடுத்திருந்த வெள்ளைநிற ஆடைகளையே அணிந்திருந்தாள். தேவதையேதான் அவள். தேவதைகளுக்கு மரணம் உண்டா? இல்லை. இல்லவே இல்லை. உண்மையில் ஏதோவொரு நாடகம்தான் அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது என்பதை உணர்ந்தேன். அங்கு குழுமியிருந்தவர்கள் எல்லோரும் அந்த நாடகத்தைப் பார்ப்பதற்கே வந்திருந்தார்கள். வீட்டையும் வீட்டு முற்றத்தையும் மட்டுமல்ல கல்லறைத் தோட்டத்தையே நாடக மேடையாக மாற்றியிருந்தார்கள். ஒரு நாடகத்தை கல்லறை தோட்டம் வரைக்கும் ஏன் கொண்டு செல்லவேண்டும்? என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. கல்லறை தோட்டத்தில் நின்று பலமாக சிரித்தேன். அவர்கள் நாடகத்தை அதோடு முடித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை அவர்கள். அத்தை மகள் இருந்த பெட்டியை சவக்குழியில் இறக்குவதற்குவதற்காக கயிறை பெட்டியின் அடிப்பகுதி வழியாக இட்டான் ஒருவன். என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. என் உடல் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டேன். அவன் வாயிலும் மூக்கிலிருந்து இரத்தம் வந்தது. நான் விடவில்லை. மீண்டும் மீண்டும் அவனை முகத்தில் குத்துவிட்டேன். அவன் வலியால் கத்தினான். நான் விடவேயில்லை. அப்போது இரண்டு மூன்று பேர் என் கைகளை பிடித்து ஏதோ பாதாள உலகத்திற்கு இழுத்துச் செல்லவதை போல் தோன்ற என் கண்கள் இருண்டு தலை சுற்றியது. என் அம்மா எங்கோ தூரத்திலிருந்து அழுவது கேட்டது.

“பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல. அதிர்ச்சிலதான் மயக்கமாயிருக்கான். கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிரும்.” என்று நர்சாக இருக்கும் மார்க்கரெட் அக்கா பேசுவது ஏதோ உலகத்திலிருந்து கேட்டது. கண்கள் விழிக்க கல்லறையின் அருகிலுள்ள ஒரு வீட்டின் வரண்டாவில் நான் படுத்திருக்க என்னை சுற்றி உறவினர்கள் சிலபேரும் அம்மாவும் இருப்பது தெரிந்தது. அழுது அழுது அம்மாவின் முகம் வீங்கிபோயிருந்தது. “கடவுள் கொடுத்த பிள்ளைய அவரே எடுத்துகிட்டா நம்ம என்னப்பா பண்ண முடியும்.” என்று என்னுடைய அம்மா கூறினாள். நான் எதுவும் பேசவில்லை. மௌனமாக அழுதேன்.


அதிக நேரம் திண்ணையில் என்னால் இருக்க முடியவில்லை. மீண்டும் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றேன். சோபியாவின் உடல் அடக்கப்பட்டு கல்லறை மூடப்பட்டிருந்தது. கல்லறைத் தோட்டத்தில் கூடியிருந்தவர்கள் வேக வேகமாக கலைந்து செல்ல ஆரம்பித்தனர். அவர்கள் எல்லோரும் விரைந்து சென்று வாழப் போகிறவர்கள் போல தோன்றினார்கள். வாழ்க்கை மீது அவர்களுக்கு அவ்வளவு மோகம். ஒருவேளை வாழ்க்கையை நித்தியமாக தக்கவைத்திருக்க முடியும் எனும் அசட்டு நம்பிக்கை அவர்களுக்குள் இருக்கிறது போலும்.

எல்லோரும் கல்லறைத் தோட்டத்தை விட்டு போனபிறகும் நான் அங்கேயே நின்றிருந்தேன். மாலையிருட்டுடன் மழையிருட்டும் திரண்டு வர கல்லறை தோட்டமே குத்திருட்டாகியிருந்தது. அப்போதும் அங்கேயே நின்றிருந்தேன். நான் என் அத்தை மகளிடமிருந்து விடை பெற விரும்பவில்லை. எனக்கு அவளிடம் நிறையப் பேசவேண்டும் போலிருந்தது.

நானும் சாவும் முதலில் வழிபோக்கர்கள் போலத்தான் சந்தித்துக்கொண்டோம். நாளாகி பழகப் பழக சாவு எனக்கு மிகவும் நெருக்கமான நண்பனாகிவிட்டது. இப்போது அது என்னுள்ளேயே புகுந்து இரண்டற கலக்க உடலெங்கும் சாவின் வாடை வீச என் குரல் சாவின் குரலாகவே மாறிவிட்டது.



ஆத்ம மரணத்தின் நீட்சிதான் உடலின் மரணம். ஆத்மா ஏற்கனவே செத்துப்போக படுக்கையில் படுத்தவண்ணம் உடலின் மரணத்தைப் பற்றி தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

இனிமேலும் நான் சாவை பார்த்து பயப்படும் கோழையென்றெண்ணி நீங்கள் யாரும் சிரிக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் கூறியவற்றைக் கேட்ட உங்களால் எனக்கும் சாவிற்குமுள்ள நெருக்கம் பற்றி கண்டிப்பாக புரிந்துகொள்ள முடியும்தான்.

இதோ படுக்கையில் படுத்திருக்கும் என்னை சுற்றி மீண்டும் மரணத்தின் பூதங்கள் ஓலமிடுகின்றன. தேவாலயத்திலிருந்து மீண்டும் சாவு மணியின் ஓசை கேட்கிறது. ஆனால் அது எனக்காக அடிக்கப்பட்ட சாவு மணியல்ல என்றே நினைக்கிறேன். ஏனென்றால் நான் இன்னும் மின்விசிறியில் கயிறைக் கூட மாட்டவில்லை.

---------------------------------------------------

புது எழுத்து (பத்தாம் ஆண்டு சிறப்பு மலர்)